உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

47

இவ் விருவகை யறிவிப்பும் அறத்துப்பாலிலும் காமத்துப்பாலிலும் முறையே அடங்கியுள்ளன. ஆதலால், திருவள்ளுவர் வீட்டைப்பற்றிக் கூறாது விட்டு விட்டார் என்பது பொருந்தாது.

தமிழிலக்கியம் சமற்கிருத இலக்கியத்தினின்றும் வேறுபட்டதாகை யால், அனைத்திந்திய இலக்கியத்திற்கு உட்பட்டதன்று. சமற்கிருத இலக்கியம்

தமிழிலக்கியத்திற்குள் அடங்குமென்று கூறின் மிகையாகாது.

தமிழகம் தனிநாடு; தமிழர் தனியினத்தார்; தமிழ் நாகரிகம் தனிப் பட்டது. ஆரியர் தமிழரையும் தம்மைப்போல் எல்லாவகையிலும் கலவை யராகக் காட்ட முயல்கின்றனர்.

இன்னும் இதன் விரிவையெல்லாம் என் ‘தமிழ் வரலாறு’, ‘வடமொழி வரலாறு’, ‘தமிழர் மதம்' என்னும் நூல்களுட் கண்டு கொள்க.

அயன், ஆவணி (ச்ராவண), காப்பியம், தருமம், பூராடம் (பூர்வா ஷாட) என்னும் வடசொற்கட்கு, முறையே, நான்முகன், மடங்கல், வனப்பு, அறம், முற்குளம் என்னும் தென்சொற்களிருப்பதால், அவ் வடசொற்கள் தமிழுக்குத் தேவையில்லை.

ஆரியர் வருமுன், தமிழகத்தில் மாதப்பெயர்களெல்லாம் ஓரைப் பெயர்களாலேயே வழங்கிவந்தன. அம் முறைப்படி ஆவணி மடங்கல் (சிம்மம்) எனப்பெறும்.

பர். சட்டர்சியாரும் பர். கத்திரேயாரும் இணைந்தெழுதிய இந்தியத் திணைக்களஞ்சியம்

VII மொழிகள்

(GAZETTEER OF INDIA 1965)

1. கி.மு. முதலாயிர வாண்டின் முற்பாதியே வடஇந்திய ஆரிய மொழியாளர், தங்கள் மொழியை, சிறப்பாக வேதங்களிலும் அவற்றிற்குப் பிற்பட்ட முந்து சமற்கிருத இலக்கியத்திலும் நாட்டப்பெற்ற இலக்கிய மொழிவடிவுகளை, அறிவியல் முறையில் ஆயத்தொடங்கினர். கி.மு. முத லாயிர வாண்டின் நடுப்பட்ட பண்டை இந்திய இலக்கணக்காரரின் பழைய இந்தாரிய மொழி பற்றிய அறிவியலா-வு (கி.மு. 5ஆம் நூற்றாண்டில்)