உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பண்டையுலக முழுவதிலும் தலைசிறந்த மொழியியல் வெற்றியான பாணினி சமற்கிருதவிலக்கணமாக முடிந்தது.

இதன் மறுப்பு

பக். 467-8

இந்திய ஆரியரின் முன்னோர் இந்தியாவிற்குட் புகுந்தபோது இலக்கிய மும் எழுத்தும் இன்றி எளிய முல்லை நாகரிக நிலையேலேயே இருந்தனர். அவர் புகுந்த காலம் கி.மு. 2000-1500.

ஆரியரின் முதலிலக்கியம் பல்வேறு சிறுதெ-வ வழுத்துத் திரட்டா கிய வேதங்கள். வேதமொழி வழக்கற்றபின் வேதச்சொற்கட்குப் பொருள் விளக்கி யெழுதிய யாசுக்கரின் நிருத்தம் (நிருக்த) என்னும் சொற்பொருள் நூலே, வேதத் திற்கு அடுத்தெழுந்த ஆரிய நூல்.

ஆரியப் பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்புகொண்டு தமிழிலக்கணங் கற்றபின்பே, பிராதிசாக்கியம் என்னும் வேதப்பாட வேறு பாட்டுக் கிளைகளின் ஒலியிலக்கண நூல்களும், ஐந்திரம், பாணினீயம் (அ டாத்யாயீ) முதலிய (நன்னூல்போல் எழுத்துஞ் சொல்லுமே கூறும்) வியாகரணம் என்னும் இலக்கண நூல்களும் முறையே தோன்றின.

ஆரியரின் இந்திய வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே (கி.மு. 10,000 போல்) பஃறுளியாற்றங்கரை மதுரையில் தலைக் கழகம் தோன்றியதாலும், அக்காலத்துத் தமிழிலக்கண நூல்கள் இயற்றமிழ்க் கூறாகிய எழுத்துஞ் சொல்லும் பொருளுங் கூறும் பிண்டங்களாகவும், இயலிசை நாடகமென்னும் முத்தமிழுங் கூறும் மாபிண்டங்களாகவும் இருந் தமையாலும், ஆரியப்பிராதி சாகித்தியங்கட்கும் வியாகரணங்கட்கும் தமிழ் நூலே முதல்நூல் என்பது தெள்ளத் தெளிவாம்.

ஆயினும், தமிழையும் தமிழரையும் என்றும் தாழ்த்தியே வைத்திருத் தற்பொருட்டு, ஆரியப் பிராமணர் தம்மை நிலத்தேவரென்றும் தம் கலவை மொழியாகிய வேதமொழியையும் அரைச் செயற்கை யிலக்கிய நடை மொழியாகிய சமற்கிருதத்தையும் தேவமொழியென்றும் கூறித் தமிழரை ஏமாற்றியதற்கேற்ப, தமிழிலக்கண நூல்களின் முதன்மையையும் ஆரிய விலக்கண நூல்களின் வழிமையையும் அடியோடு மறைத்துவிட்டனர். பழங்குடிப் பேதைமையால் மதத்துறையில் மடம்பட்ட தமிழரும் அதன் கூற்றை முற்றும் நம்பிவிட்டனர். அந் நிலைமையை அறிவாரா-ச்சி மிக்க இக்காலத்தும் பயன்படுத்திக்கொண்டு, மொழியிலக்கணநூலை முதன்