உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

49

முதலாராந் தியற்றியவர் ஆரியரே என்று கூறுவது உலக மக்களை யேமாற்றல் என்னும் மாபெருங் குற்றத்தின்பாற்படுவதேயாகும்.

2.

சமஸ்கிருதத்திலும் ஏனைய இலக்கியத்திலும் ஆரிய நடை மொழிக ளல்லாத மொழிகளைப்பற்றிய குறிப்புகள் மிக அருகியுள்ளன. கிறித்தவ வூழித் தொடக்கத்தில், தென்னிந்திய மொழிகளில் இலக்கிய முயற்சி அன்றுதான் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகின்றது. ஆரியமொழி ஆந்திர கருநாடக நாடுகளில் தனக்கு ஓர் இடத்தை மிக முந்திப் பிடித்துக் கொண்டது. அங்கு சமற்கிருதமும் பிராகிருதங்களும் எதிர்ப்பின்றியும் வினாவின்றியும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தோன்றுகின்றது. ஆனால், தெற்கே தமிழ்நாடும் மலையாள நாடுமாகிய தொலைவான திரவிட நிலப் பகுதியில், தமிழ் சமஸ்கிருதத்தினின்றும் வடபால் நடைமொழிகளி னின்றும் வேறுபட்டதென்னும் கூருணர்ச்சி, புலவரிடையும் பிறரிடையும் கி.பி. முதலாயிர வாண்டின் நடுவிலேயே இருந்ததாகப் பழந்தமிழிற் காண் கின்றோம். தமிழ்ச் சிவநாயனார் ஒருவர் பரம்பொருளைச் சிவ வடிவிற் பின்வருமாறு விளிக்கின்றார். (திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரம் தோரா. கி.பி. 7ஆம் நூற்றாண்டு);

“ஆரியன் கண்டா-” = நீ ஆரியனா யிருக்கின்றா-. “தமிழன் கண்டா-”= நீ தமிழனாகவு மிருக்கின்றா-.

வடவாரியன் மொழியாகிய சமற்கிருதமும் தென்மொழியாகிய தமிழும் ஆகிய இரண்டும் இறைவனிடத்துத் தோன்றியவையே என்பது இதன் கருத்து. அதே நாயனார் "ஆரியந் தமிழோ டிசையானவன்” என்றும் கூறு கின்றார். இறைவன் சமற்கிருதத்தையும் தமிழையும் அவ் விரண்டின் இன் னிசையும் தனக்கு வடிவாகக் கொண்டவன் என்பது இதன் பொருள். இங்ஙனம் தமிழின் தொன்முது பழங்காலத்தில் சமற்கிருதத்திற்கு அல்லது ஆரிய மொழிக்கு ஏற்பிருந்ததே அதன்மீது வெறுப்பிருந்ததில்லை. சமற்கிருதத்திற்குப்போல் தமிழுக்கும் ஒரு தனியிடம் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் மறுப்பு

யன்றி

- பக். 368-9

ஆரிய நூலாசிரியர் வேண்டுமென்றே ஆரியமல்லாத பிற மொழி களைஆரிய இலக்கியத்திற் குறிப்பிடவில்லை. தமிழிலக்கியம் கி.மு. 10,000 ஆண்டு கட்கு முன்பே முழுவளர்ச்சியடைந்துவிட்டது. தெலுங்கரும் கன்னடரும் ஆரியத்தை முந்தி ஏற்றுக்கொண்டது. அவ் விரினத்தாரும்