உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

ஆரியர் தமிழ் நாட்டிற்கு வரும்வழியில் இன்று போன்றே அதனையடுத்து அதற்கு வடக்கிலிருந்தமையாலும், அவர் அவர் வந்தபோது தெலுங்கிலும் கன்னடத்திலும் இலக்கிய மின்மையாலும், மொழியினவுணர்ச்சி இக்கால த் திலுள்ள அளவுகூட அக்காலத்தி லின்மையாலும், ஆரியம் தேவமொழி யென்னும் ஏமாற்றை நம்புந்தன்மை அவர்க்கு மிக்கிருந்த தனாலுமே.

66

"ஆரியன் கண்டா-”, “தமிழன் கண்டா- என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத் தொடர்கள் ‘அவன் ஆரியன்காண்', ‘அவன் தமிழன் காண்’ என்று பொருள்படும் படர்க்கைக் கூற்றுகளேயன்றிப் பர். சட்டர்சி கொண்டதுபோல் முன்னிலைக் கூற்றுகளல்ல.

“கண்டா-” என்பது மாந்தனொருவனை நோக்கிக் கூறும் முன்னிலை யொருமையிசை. இதையறியாது ஒரு முதன்மை வா-ந்த இந்திய அரசியல் வெளியீட்டில் இலக்கணவழுவாகப் பொருள் கூறியிருப்பது மிக இரங் கத்தக்க தொன்றாகும்.

66

ஆரியந் தமிழோ டிசையானாவன்

என்பதிலும் இசை என்பது

தமிழிசையையே குறிக்கும்.

தமிழிலக்கியம் தோன்றியது கி.மு 10,000 ஆண்டுகட்குமுன்.

சு

திருநாவுக்கரசு நாயனார் காலம் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டு. இங்ஙனமிருக்கவும், நாயனார் காலத்தைத் தமிழின் தொடக்கக் காலமெனக் குறித்திருப்பது எத்துணைக் கேடான காலவழுவாகும்!

ஆரியமொழிக்குத் தமிழகத்திலும் தொடக்கத்தில் ஏற்றமிருந்ததற்கு, அக்காலத்தில் மொழியாராச்சியின்மையும், ஆரியரின் வெண்ணிறமும் அவர் மொழியின் எடுப்போசையும் அவர் நிலத்தேவரென்று நம்புவதற்குத் துணையாயிருந்தமையும், தமிழ வேந்தரின் பேதையையுமே கரணிய மாம்.

3. ஆயின், "பிற்காலத்தில் செங்கொள்கை (அதாவது பிராமணியச் செங்கொள்கை) கடைப்பிடித்த புலவர், தமிழை ஒர் ஆரிய நடைமொழி யாகவும் பழந்தமிழுக்கு மூலமான ஒருவகைத் திரவிடப் பிராகிருதமாக வும் காட்டப் பார்த்தனர். இன்றோ, அரசியலும் பிறவும்பற்றிய கரணியங் களால் தொங்கட்டம் அடுத்தபக்கம் சா-ந்துள்ளது. தமிழார்வலர் சிலர் சமற் கிருதத்தையும் ஆரியயும் மொழியையும் பழந்தமிழினின்று திரிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்?

ப. 369