உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

இதன் மறுப்பு

51

பிராமணர் அன்றுமட்டுமன்று, இன்றும் தமிழைச் சமற்கிருதத்தின் கிளையாகவே காட்டிவருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழத் தமிழ் அகரமுதலியையும், 1967 ஆம் ஆண்டு விளக்கணி (தீபாவளி) மலராக வெளிவந்த ‘அமைப்பாளன்' (Organiser), என்னும் சிறப்பிதழிலுள்ள “திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதுரை என்பவையெல்லாம் சமற் கிருதச் சொற்களே" என்னும் கட்டுரையையும், காண்க. தமிழ் ஓர் ஆரியக் கிளை என்பது முழுப்பொ-யும் புரட்டுமாகும். ஆயின், தமிழ் திரவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்பது முற்றும் உண்மையே. இதற்கு மொழிநூல், வரலாறு, மாந்தனூல் ஆகிய முத்துறைபற்றிய மறுக் கொணாச் சான்றுகள் நிரம்பவுள்ளன. இக்காலம் அறிவும் ஆராச்சியும் மிக்க காலமாதலின், ஆரியப் பிராமணர் நிலத்தேவர் என்பதும் ஆரியம் தேவமொழி என்பதும் எள்ளளவும் செல்லா. இதுகாறும் தமிழரையும் திரவிடரையும் ஏமாற்றி மேனத்தாக வாழ்ந்த ஆரியர்க்கு அவர் குட்டு வெளிப்படுவது வரைகடந்த வருத்தமே. ஆயின், “மெ- வெல்லும், பொ- தோற்கும்" என்பது உண்மையன்றோ?

4. “தொல்காப்பியத்தொடு தொடங்கும் தொன்முது பழந்தமிழ் கன்னட தெலுங்கு இலக்கணங்கள் கிறித்துவிற்குப் பின் தொடக்க நூற்றாண்டு களில் தோன்றியவை; சற்று முந்தியவையாயு மிருக்கலாம்.'

இதன் மறுப்பு

- U. 369.

தொல்காப்பியக் காலம் கி.மு. 7 ஆம் ஆண்டு நூற்றாண்டு, அது இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டுத் தோன்றிய சார்பிற் சார்புநூல். ஆகவே, தமிழ் முதல் இலக்கணநூல் தோன்றிய தலைக்கழகக் காலம் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தெலுங்கு கன்னடத் திரவிடமொழி யிலக்கணங்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலும் பிற்பட்டும் தோன்றியவையே.

5. "இந்திய மொழிநூற்கும் மொழியியல் அறிவியம் முழுமைக்கும் அடிகோலப்பெற்றது, இந்தியாவிற்கு வந்த விடையூழியரும் பிறருமான ஐரோப்பிய அறிஞர் சமற்கிருதத்தைக் கண்டுபிடித்துக் கற்றதின் உடன் விளைவாகும்.”

பக். 369.