உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

53

9."நீகரோப் போலிக் குக்குலத்தார் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றனர். இவர் இருளர், காடர், பணியர், குரும்பர் என்பார். பண்டை யிந்திய நீகரோப்போலியரின் எச்சமான இவர் தம் மொழி களை யிழந்துவிட்டுத் தமிழ் வகைகளைப் பேசிவருகின்றனர்.' - பக். 375.

இதன் மறுப்பு

இது முற்றுந் தவறு. தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தனரென்று கொண்ட அடிப்படைத் தவற்றினாலேயே, இம் மேற்படைத் தவறும் ஏற்பட் டது. மேற்குறித்த நால்வகுப்பாரும் தூய தமிழினத்தாரே. அவர் மலைகளி லும் காடுகளிலும் வாழ்வதனாலும் நாகரிக மக்களொடு கூட்டுறவு கொள் ளாததினாலுமே சிறிது வேறுபட்டுத் தோன்றுகின்றனர். குரும்பர் பலர் இன்று நாட்டுப்புறங்களிலும் நகர்களிலும் வந்து வேற்றுமை தெரியாது வாழ்கின்ற னர். இருளரும் ஒருசிலர் அவரைப் பின்பற்றியிருக்கின்றனர். தமிழைத் தா- மொழியாகக் கொண்டுள்ள பழங்குடி மக்கள் அனைவரும் தூய தமிழரே.

10. “ஆத்திரியப் பேச்சு திரவிடத்திலும் ஆரியத்திலும் கலந்துள்ளது.”-

பக்.375.

இதன் மறுப்பு

ஆத்திரியம் தமிழிற் கலக்கவில்லை.

11. "அடுத்து, சின்ன ஆசியாவிலிருந்தும் கீழை நண்ணிலக் கடற் கரையிலிருந்தும் வந்தவராகச் சொல்லப்படும் திரவிடரைப்பற்றி நாம் கவனிக்கவேண்டியுள்ளது. அவர் சின்ன ஆசியரும் கிரேத்தாத் தீவினரும் கிரேக்க நாட்டு (ஈசியர் என்னும்) எல்லெனிய முன்னை மக்களும் ஆகிய வரொடு சேர்ந்த நண்ணிலக் கடற்கரை வாணராயிருந்தனர். இந்தியத் திர விடர் இங்ஙனம் முதலில் கிரேக்க நாட்டு எல்லெனிய முன்னையரும் சின்ன ஆசியருமான மக்களின் ஒரு கிளையாகவே யிருந்தனர். திரவிடத்திற்கும் கீழை நண்ணிலக் கடற்கரையர் மொழிக்கும் இடைப்பட்ட இனமை இன்னும் துல்லியமாகத் திட்டஞ் செ-யப்பெறவில்லை. ஆயின், சில பொதுச் சொற்கள் காணப்படுகின்றன. இந்தியத் திரவிட மக்களின் சில சமயக்கருத்து களும் ஏடல்களும் (Ideas) வணக்கங்களும் பழக்கங்களும், மேலை யாசியாவிற்கும் நண்ணிலக் கடற் கரைக்கும் உரியவற்றொடு வலுத்த உறவு கொண்டுள்ளன. திரவிடர் பொதுவாக நண்ணிலக் கடற்கரையர்போல் நீள் தலையராவர். சிந்து பஞ்சாபிலும் இந்தியாவின் ஏனைப் பகுதிகளிலு மிருந்த நகர நாகரிகம் திரவிடமாகவும், அதனால் மேலையாசியாவொடு தொடர்பு கொண்டதாகவும்