உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

தெரிகின்றது. திரவிடமொழிகள் இன்று தக்கணத்திலும் தென்னிந்தியாவிலும் உறுதியான பாளங்களாக ஊன்றி, ஆரியமொழியின் வலுத்த வலுத்த தாக்கு தல்களையும் எதிர்த்துத் தனிநிலை பெற்றுள்ளன. இந்திய ஆரியமொழிகளில் வலுத்த திரவிட ஆத்திரியக் கூட்டடிப்படையிருப்பது போன்றே, திரவிட மொழிகளிலும் ஆத்திரியக் கூறுள்ளது.

66

“இத் திரவிடமொழிகள் தெற்கில் ஆரியமொழிகளின் தாக்குதல் களைத் தடுத்துள்ளன. வடஇந்தியாவிற் பெரும்பாலிடங்களில் அவை மெள்ள மெள்ள ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன. ஆண்மையும் நல்லமைப் பொழுங்குமுள்ள ஒரு வெற்றியர் கூட்டத்தின் நெகிழ்ச்சியும் வலிமையுங் கொண்ட பேச்சாகிய ஆரியமொழி, தனக்கு எதிர்ப்பட்ட எதையும் விலக்கித் தள்ளியது. சீனதிபேத்தம், ஆத்திரியம், திராவிடம் என்னும் தனிப்பட்ட

முக்குடும்பங்களைச் சேர்ந்த பற்பல வேறின மொழிகளைப் பேசிய, ஆரி யத்திற்கு முன்னைமக்களிடை மொழியொற்றுமை யின்மையால், இது எளிதாக நேர்ந்தது. ஆயின் இன்றும் திரவிடமொழிகள் ஆரியத்திற்கு அடுத்து, முதன்மை வா-ந்தவை. அவற்றுட் சில மிக வுயர்நிலை இலக்கியங்கொண் டுள்ளன. அவற்றுள் தலைசிறந்தது எங்ஙனமும் தமிழ்தான். திரவிடமொழி களின் எழுதப்பட்ட இலக்கியத் தொடக்கம், பெரும்பாலும் இருந்திருக்கக் கூடியபடி, கிறித்துவிற்கு முற்பட்ட முதலாயிர வாண்டின் இறுதி நூற்றாண்டு களாகும். ஆயின். திரவிடரிடை இலக்கிய முயற்சி கி.பி.முதல் இரண் டொரு நூற்றாண்டுகளிலிருந்து மிகமிகப் பயன்படுவதாயிற்று. கி. பி. முத லாயிர வாண்டின் நடுவையடுத்து, முதன்மைமிக்க திரவிடமொழிகள், நல் லமைப்பொழுங்கும் பண்பாடுங்கொண்ட மக்கட்கூட்ட மொழிகளாக முற் றும் நாட்டப்பட்டுவிட்டன. அவை எதிர்கால மலையாளத்தை யுள்ளிட்ட - பக். 378 9. பழந்தமிழும் பழங்கன்னடமும் பழந்தெலுங்கும் ஆகும்."

இதன் மறுப்பு

தமிழர் அல்லது திரவிடர் முதுபண்டைக்காலத்தில் மேலையாசியா விலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்ததினாலேயே, மேனாட்டுத் தெ-வ வணக்கங்களும் பழக்கவழக்கங்களும் சொல்வழக்காறுகளும் தமிழ ருடையவற்றொடு ஓரளவு ஒத்துள்ளன. இதன் விளக்கத்தை வி. ஆர். (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Ori- gin and Spread of the Tamils) என்னும் ஆங்கில நூலில் விரிவாகக் கண்டுகொள்க.

திரவிடமொழிகள் தென்னிந்தியாவிற் சிறந்தும் செறிந்தும் நிலைத்தும் இருப்பதே, திரவிடரும் அவரின் முன்னோரான தமிழரும் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்பதை நாட்டப் போதிய சான்றாகும்.