உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

55

ஆரியர் முகமதியரும் ஆங்கிலரும்போற் படையெடுத்துப் பொருது வென்று தம் மொழியை இந்தியாவிற் பரப்பவில்லை; அடுத்துக் கெடுத்தலும் ஏமாற்றலும் ஆகிய வலக்காரங்களைக் கையாண்டே பழங்குடிமக்களை மெல்ல மெல்ல அடிப்படுத்தினர். அவரது வெண்ணிற மும் அவர் மொழியின் வல்லோசையுங் கண்டு தமிழரும் திரவிடரும் ஏமாறிவிட்டனர். மேலும், சிவநெறியும் திருமால் நெறியும் ஆகிய தமிழர் சமயங்களையே ஆரியர் தழுவியதாலும், ஆரியத்தோடு பிராகிருதமும் திரவிடமும் தமிழும் ஆகிய இந்திய மொழிகளைக் கலந்தே சமற்கிருதத்தை அமைத்ததாலும், இந்தியருட் பெரும் பான்மையரும் மதப்பித்த மும் கொடைமடமும் மிக்க வருமான தமிழரையும் திரவிடரையும் ஆரியர் எளிதா-அடிப்படுத்தத் தோதாயிற்று.

ஆரியமொழிகள் என்று தவறாகக் கருதப்படும் வடஇந்திய மொழி களின் அடிப்படை தமிழா- அல்லது திரவிடமா- இருப்பது உண்மையே. ஆயின், ஆரியர்க்கு முற்பட்ட பழந்தமிழில் வேறெம்மொழியும் கலக்க வில்லை. ஆரியத்தின் (சமற்கிருதத்தின்) கலப்படத்தை ஒத்துக்கொள் வதால் மட்டும், தமிழையும் கலப்படமாகக் கூறுவது உண்மையாகிவிடாது.

தமிழும் திரவிடமும் ஒரே காலத்தில் இலக்கிய வளர்ச்சி பெற்றவை யல்ல. தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளின் இலக்கியமெல் லாம் கி. பி. 9 ஆம் அல்லது 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையே. தமிழிலக்கியத் தோற்றம் கி. மு. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது முன்னரே கூறப்பட்டது.

12. "இந்திய ஆரியமொழிகள், அவற்றின் முதுபழந் தொல்வடிவ மான வேத சமற்கிருதத்தொடு தொடங்கி, இந்தியாவின் மதித்திறனும் பண் பாடும்பற்றிய பெரிய உரிமைப்பேறாக இருந் துவந்திருக்கின்றன." - பக். 379.

இதன் மறுப்பு

வேதமொழி வேறு; அதற்குப் பிற்பட்ட அரைச் செயற்கை யிலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதம் வேறு. வேதமொழியை வேத சமற்கிருதம் என்பது, முற்காலப்படுத்தம் (prochronsim) என்னும் காலவழுவாகும்.

13. "தமிழிலக்கியம் கிறித்தவ வூழியின் தொடக்கக் காலத்தில் தோன்றிய தாகும். அது பரந்த சமற்கிருதக் கூற்றைத் தன்னுட்கொண்டிருந்து கொண்டே பண்பட்ட வேறெத் திரவிட மொழியையும்விட மிகப் பேரளவு தன் திரவிடச் சொற்றொகுதியின் தூ-மையைத் தாங்கிநிற்கின்றது.

و,

L. 404.