உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இதன் மறுப்பு

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

ஆரிய வருகைக்கு முற்பட்ட செந்தமிழில் சமஸ்கிருதக் கூறேயிருந்த தில்லை. அந் நிலைமையைக் காட்டும் நூல்கள் அனைத்தும் அழிக்கப் பட்டுவிட்டன.

14. "இந்திய மொழிகளின் வரலாற்றில், இன்றும் சமற்கிருதத்தின் முதன்மை சிறப்பாக வலியுறுத்தப் பெறவேண்டும். சமற்கிருதம் எங்கேனும் பேச்சுமொழியா யில்லாதிருப்பினும், இந்தியாவின் 14 தேசிய மொழிகளுள் ஒன்றாக ஒப்புக்கொள்ளப்பெற்றுள்ளது. ஆயின், இன்னும் அதை வீட்டு மொழியாகக் கருதுபவர் சின்னூற்றுவர் இந்தியாவில் உளர் என்பதை நோக்கும் போது உவகை யுண்டாகின்றது. உண்மையில் சமற்கிருதம் அல்லது இன்னுஞ் சரியானபடி பழைய இந்தாரியம், கிறித்துவிற்குப் பன்னூற்றாண்டு கட்கு முன்பே உலக வழக்கற்றுப்போ-, பிராகிருதம் என்னும் இடையிந்தாரியமாகத் திரிந்து, பின்பு இக்கால அல்லது புதிய இந்தாரிய மொழிகளாக மாறிற்று. ஆயின் சமற்கிருதம் இந்தியாவெங்கும் எப்போதும் விடாமுயற்சியொடு பண்படுத்தப் பெற்றுவந்து. இன்னும் இந்திய மொழிகளுட் பெரும்பாலானவற்றின் உயிர்நாடியிணைப்பாக இருக்கின்றது. இந்திய வொற்றுமை முதற்படியாகப் பண்பாட்டொற்றுமையே. சமற்கிருதம் இப் பொழுது அனைத்திந்தியப் பண்பாட்டின் அடையாளமும் வெளிப்படுத்த மும் ஆகும். இதுவுமன்றித் திரவிடம் உட்பட எல்லா இந்திய மொழிகளும் உயர் பண்பாட்டுச் சொற்களைச் சமற்கிருதத்தினின்று கொள்ளுகின்றன. இக்கால அறிவியல் (Scientific) கம்மிய (Technological) மன்னியல் (Humanistic) ஏடல்களும் செ-முறைகளும் (Processes) கருத்தமைவுகளும் (Concepts) பற்றிய புதுச் சொற்களின் தேவையை இந்திய மொழிகள் எத்துணை அதிகமா- உணர்கின்றனவோ, அத்துணை யதிகமா-ச் சமற் கிருத உறுத்தமும் அவற்றின்மேற் படுகின்றது. தேவையான சொற்கள் சமற்கிருதத்தினின்று நேரே எடுக்கப்படுகின்றன. அல்லது அவை சமற்கிருத வேர்ச்சொற்களும் ஈறுகளுங்கொண்டு புனையப்பெறுகின்றன. - பக். 409

இதன் மறுப்பு

சமற்கிருதம் ஓர் இலக்கிய நடைமொழி. அது என்றேனும் வழக்கு உற்றது மில்லை, அற்றதுமில்லை.

சமற்கிருதத்தை வீட்டுமொழியாகக் கருதுவார் சிலர் உளராயின், அது அவரது மொழிப்பித்த முதிர்ச்சியையே காட்டுகின்றது.

சமற்கிருதம் பழைய இந்தாரியமன்று. அது இடையிந்தாரியமாக!வும் புது இந்தாரியமாகவும் திரியவில்லை. முதற்காலத் திரவிடமாகிய வடதிர