உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

57

விடமே பிராகிருதமாகவும் இற்றை வடஇந்திய மொழிகளாகவும் திரிந்துள்ளது. பிராகிருதத்தைத் தன்னுள் ஒரு கூறாகக்கொண்டு அதற்குப் பிற்பட்டுத் தோன்றியதே சமற்கிருதம்.

உயர் பண்பாட்டுச் சொற்களைக் கடன் கோடற்கும் அறிவியலும் கம்மியமும்பற்றிய புதுச்சொற்களைப் புனைவதற்கும் சமற்கிருதத் துணையை இன்றியமையாததாகக் கொள்வது, தமிழொடு தொடர்பற்ற திரவிட மொழிகட் குரியதேயன்றித் தமிழுக் குரியதன்று. சமற்கிருதச் சொற் களுள் ஐந்தி லிருபகுதிக்கு மேற்பட்டவை தமிழ். ஆதலால், தமிழ்த்துணை சமற்கிருதத்திற்கு வேண்டுவதேயன்றிச் சமற்கிருதத் சமற்கிருதத் துணை தமிழுக்கு வேண்டுவதன்று.

இங்ஙனம். பர். சட்டர்சியாரும் பர். கத்திரேயாரும் தமிழைத் தமிழர் வாயிலாகக் கல்லாது தமிழ்ப்பகைவரான பிராமணர் தமிழைப்பற்றி ஆங்கி லத்தில் தவறாக எழுதியுள்ளதையே படித்துப் பிழைபடவு ணர்ந்து. மிகப் பொறுப்புவா-ந்த அரசியல் வெளியீடாகிய இந்தியத் திணைக் களஞ்சியத்தில் தாம் விரும்பியவா றெல்லாம் தமிழைப் பழித்தும் இழித்தும் வரைந்துள்ளனர்.

இவர் போக்கைத் தழுவியே பர்.சி.பி. (C.P.) இராமசாமி ஐயரும் பிறரும் வரைந்த இந்தியச் சமயங்கள்பற்றிய கட்டுரையிலும் திருவள்ளுவர் காலம் கி.பி ஆம் நூற்றாண்டென்னும் கருத்துப்படக் குறிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டே, இந்திய அரசினர்க்கு ஏதும் இழுக்கு நேராதவாறு, இந்தியத் திணைக்களஞ்சியத்தை வெளியிட்ட அரசியல் அதிகாரியார் "இம் மடலத்தில் வெளிடப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளருடையனவேயன்றி இந்திய அரசியலாருடையன வல்ல." (The views expressed in this volume are those of the contributors and not of the Government of India) என்று உள்தலைப்பிதழின் பின்புறத்திற் குறித்துத் தப்பிக்கொண்டதும் என்க.

பர். சு. கு. சட்டர்சியார் 'நந்தமௌரியர் காலம்' என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில், தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று வந்தவர் என்று வரைந்ததை அன்றே கண்டித்திருந்தால், அவர் கொள்கை இத்துணை வளர்ந்தும் இராது. ஆயின், முப்பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும், குடியிருக்கும் வீட்டிற் கொள்ளிவைப்பவரும் தமிழ்ப்பகை வரை வலிய வரவழைத்தச் சிறப்புச் செ-பவருமாதலின் தமிழுக்கு இந் நிலைமை நேர்ந்ததென்க.