உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பர், சேதுப்பிள்ளையார் தம் பதவியினாற் பெற்ற செல்வத்திலிருந்து, தம் அன்னையார் பெயரும் தம் பெயரும் என்றும் நிலைத்திருக்குமாறு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத் திற்கும் தனித்தனி காலிலக்கம் உருபா சொற்பொழிவு மானியமாக ஒதுக்கி வைத்திருப்பதால், அதன் சார்பிற் சொற்பொழிவாற்றும் புலவர், தமிழ்நலத் தைக் கருதாது தம் நலம் ஒன்றையே கருதி,அவரைத் தலைசிறந்த தமிழ்த் தொண்டராக வானளாவப் புகழ்வது, தனக்கு ஒரு சூப்பெலும் புத்துண்டு கிடைக்குமாறு தன் தந்தை மரத்தினின்று கீழ்விழுந்து காலொடிவதை விரும்பிய சிறுமியின்

தன்மையையே ஒக்கும்.

9. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்

பேராய ஆட்சியிற் பேராயக் கட்சிச் சார்பினால் மதுரைப் பல்கலைக்கழ கத்திற்கு முதல் துணைக் கண்காணகராக அமர்த்தப்பெற்று முதல் ஆண்டி லேயே அப் பல்கலைக்கழகத்திற் பண்டாரகர் என்னும் கண்ணியப் பட்டம் பெற்ற பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தமிழைச் செவ்வையாக அறியாமைக்கு முந்நிலைமைகள் கரணியமா- உள்ளன. அவையாவன:

1. சென்னையரா யுள்ளமை.

2. சமற்கிருத அடிப்படையில் தமிழ் கற்றமை.

3. பேராயத்தைச் சேர்ந்தமை.

பேராயத்தைச்

சேர்ந்ததினாலேயே அவர் இதுவரை இந்தியை எதிர்த்ததில்லை. இந்தியை ஏற்பவர் உண்மையான தமிழன்பரா யிருக்க முடி யாது. அதனாலேயே கல்வித்தந்தையார் திரு. கருமுத்து தியாகராசச் செட்டி யாரும் நாவலர் சோசுந்தர பாரதியாரும் பேராயத்தை விட்டு விலகினர்.

பர்.தெ.பொ. மீ. தம் தமிழ்ப்பற்றின்மையை வெளிப்படையாகக் காட் டிக்கொண்ட நிகழ்ச்சிகள் வருமாறு:

1. 'தமிழா நினைத்துப் பார்' என்னும் நூலில் தமிழரின் முன்னோரை வெளிநாட்டினின்று வந்தவராகக் கூறியிருத்தலும், பர். சு .கு. சட்டர்சியார் அண்ணாமலை பல்கலைக்கழகத் திரவிட மொழிநூல் துறைத் தொடக்க விழாத் தலைமையுரையில் அங்ஙனங் கூறியிருப்பதை மறுக்காமையும்.

66

ஆஸ்திரேலியாவிலும் கிழக்குத் தீவுகளிலும் வாழ்கிற மக்களினமும்

தென்னிந்தியாவிலும்

இலங்கையிலும் ஒருகாலத்தில் வாழ்ந்திருத்தல்