உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

தமிழின் பெருமையைக் காட்டுவர். அங்ஙனம் காட்டியவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் கோ. இராமச் சந்திரனார் என்ற நிலவழகனார்.

வழுதுணங்கா-, தவளைக்கா-, மீசை, இளநீர் முதலிய சொற்கள் முண்டாமொழிச் சொற்களென்றும், முருங்கை என்பது சிங்களச்சொல் லென்றும் கூறியிருப்பது, எத்துணை இளிவரலும் இரங்கத்தக்க செ-தியும் ஆகும்! ஆங்கிலரான பேரா. பரோ கூட முருங்கை என்பது தென்சொல் லென்று தம் 'சமற் கிருதமொழி' என்னும் ஆங்கில நூலுட் கூறியிருத்தல் காண்க.

இனி மத்திகை, சுருங்கை, கன்னல், ஓரை என்னும் சொற்கள் கிரேக்கச் சொற்களேயாம் என்று கூறியிருப்பது, அவரது தமிழறிவுத் தாழ்வையே வலியுறுத்திக் காட்டுகின்றது. கிரேக்கத்தில் இந்நாற் சொற்கள் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான வேறுசொற்களும் தமிழாயுள்ளன.

அவற்றுட் பல வருமாறு:

தமிழ்

அஃகு

கிரேக்கம்

oxus (sharp)

அகில்

அகை

அச்சு

அசை

அஞ்சல்

agallochen

ago (to drive)

axon

seio

aggelos (angelos)

ana (up)

அண்

அத்தன்

tetta

அப்பன்

abbas

அப்பால்

apo

அம்பு (வளையல்)

amphi (round)

அரசன்

அரத்தம்

அரிசி

அருவு

archon

erythros

oryza

rheo (flow)