உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

கன்ன என்னும் கிரேக்கச் சொற்கு நாணல் என்றே பொருள். இச் சொற்கு அடிவேரும் அடிமூலப்பொருளும் தமிழிலேயே யிருத்தல் காண்க.

ஓரை

ஓர்

-ஒர்

ஒல்லுதல் = பொருந்துதல். ஒல் ஓர் ஓர் ஓர்தல் = பொருந்துதல், கூடுதல். ஓரை =கூட்டம், மகளிர் கூட்டம் (பிங்.), விண்மீன் கூட்டம் (இராசி).

மேழம், விடை முதலிய பன்னீரோரைகளும் விண்மீன் கூட்டங்களா தலால், ஆங்கிலத்தில் constellation என்றும் வடமொழியில் 'ராசி' என்றும், பெயர் பெற்றிருத்தலை நோக்குக.

ஹோரா என்னும் கிரேக்கச் சொல் நாழிகை அல்லது முழுத்தம் (முகூர்த்தம்) என்று பொருள்படுவதேயன்றி, ஓரை (signs of the zodiac) என்று பொருள்படுவதன்று.

“மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை

(1081)

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள ஓரை என்னும் சொல், மேழம் விடை முதலிய பன்னீரோரையுள் ஒன்றன் எழுச்சியையே குறிக்கும்.

ஆதலால், தமிழ் ஓரைக்கும் கிரேக்க ஹோராவிற்கும் யாதொரு தொடர்புமில்லையெனக் கூறி விடுக்க.

இனி, “யூதர்கள்....புகுந்தார்கள்” ‘யூதர்’ என்ற பெயர் 'யௌதி’ என்று வழங்கும் ஹீப்ரூச் சொல்லாகும்" என்னும் கூற்று, கட்டுரையாளர் எந்த அளவிற்குத் தமிழைக் கலவையாகக் காட்ட விரும்புகிறார் என்பதையும் புலப்படுத்தும்.

(8) சென்னையில் நடைபெற்ற சட்ட மொழிபெயர்ப்புக் குழுக்கூட்டத் தில் தலைமை தாங்கியபோது, தமிழ்த் தூ-மையைப் போற்ற வேண்டும் என்ப தைக் குறிக்கொண்டு பொதுமக்கட்கு விளங்காத சொல்லைப் புகுத்தல் கூடா தென்று கூறியமை.

(9) பர். மெ. சுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியப் பதவிக்குரிய முழுத்தகுதியும் உடையாரேனும், அவரை அப் பதவிக்கு அமர்த்தாமை.