உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

69

(10) 2 ஆம் உலகத் தமிழ் மாநாட்டுக்ருத்தரங்கில் தமிழரல்லார் தமிழைப் பழித்துப் பேசியவற்றைக் கண்டியாமை.

(10) தனிநாயகம்

இவரைப்பற்றிப் பின்னர்க் கூறப்படும்.

(11) தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்

இனி, தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியர் பலர் ஓர் ஆங்கிலப் பட்டம் பெற்ற துணையானே தம்மை இறப்ப மதித்து எல்லாம் வல்லராக எண்ணி, புலமைத்திற வேறுபாடறியாதும் தமிழ்நலங் கருதாது தந் நலமே கருதியும், தம் பதவிக்குரிய தமிழ்க் கடமையில் முற்றும் தவறிவிடு கின்றனர்.

சோழன் ஒருவன் ஒளவையார் ஒருவரை நோக்கி, கம்பர் அகல வனப் பியற்றுவதில் ஆற்றல் மிக்கவர் என்று சிறப்பித்துக் கூறியபோது, பின்னவர்,

66

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செ-யரிதால் -யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

என்று பாடி முன்னவன் வாயடைந்தார்.

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்த மென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர்

பகரொ ணாதே.

என்னும் பாட்டும் பாவலர் திறமை வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும்.

இக்காலப் புலவருட் சிலர் நாவலர்; சிலர் எழுத்தாளர்; சிலர் நூல்வலர்;

சிலர் உரைவலர்; சிலர் ஆ-வலர்.