உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

75

வில்லியம் சோன்சு (Sir William Jones) என்பவர், பன்மொழி கற்றுத் தேர்ந்து 1772-ல் பாரசீக இலக்கணமும் 1780-ல் ஏழ் அரபிச் செ-யுள் மொழிபெயர்ப்பும், 1794-ல் சாகுந்தலம், இதோபதேசம், சில வேதப்பகுதிகள், மனுதரும சாத்திரம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும், வெளியிட்டார். இவரே சமற்கிருதத்திற்கும் மேலையாரிய மொழிகட்கு முள்ள நெருங்கிய தொடர்பை முதன்முதல் உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் காலத்திலேயே இற்றை ஒப்பியன் மொழி நூலும் தொடங்கிற்று.

இவர் கண்திறந்துவிட்டதன் பயனாக, 19ஆம் நூற்றாண்டிற் பொது வாகப் பல்வேறு மொழிகளின் இலக்கண நூல்களும் அகரமுதலிகளும் சிறப்பாக ஆரியமொழிகளின் ஒப்பியல் ஆரா-ச்சியும் தோன்றின. பல் வேறு மொழிநூலறிஞர், பல்வேறு மொழிகளையும் மொழிக் குடும்பங்களை யும் சிற்றளவாகவும் பேரளவாகவும் வெவ்வேறு வகையில் ஆரா-ந்து, மொழிநூல் அறிவியலை மேன்மேலும் வளர்த்து வந்தனர்.

1816-ல்

கோல்புரூக்கு (Colebrooke) என்னும் ஆங்கிலர் 1805-ல் சமற் கிருத இலக்கணமும், காம்பெல் (Campbell) என்பவர் தெலுங்கிலக்கணமும், இயற்றி வெளியிட்டனர்.

பிரெட் சுதார்ப்பு (Bredsdorff) என்பவர், 1821-ல் சொற்கள் திரிவதற்குக் கரணியங்கள் 7 என வகுத்துக்காட்டினார்.

வில்லியம் கேரி (William Carey) என்னும் ஆங்கில விடையூழியர், 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடஇந்திய மொழிகளையெல்லாங் கற்று அவற்றில் திருமறையை (Bible) மொழிபெயர்த்ததுமன்றி, வடஇந்திய மொழிகளெல்லாம் ஆரியம் என்றும், தென்னிந்திய மொழிகளெல்லாம் அவற்றினின்றும் வேறுபட்ட திரவிடம் என்றும் பிரித்துக் காட்டினார்.

யாக்கோபு கிரிம் (Jacob Grimm) என்னும் செருமானிய மொழி நூலறிஞர் முதலாம் மெ-பெயர்வு (First Consonant - Shifting) என்றும் கிரிம் நெறியீடு (Grimm's law) என்றும் சொல்லப்பெறும் ஆரிய இனமொழி மெ-ம்மாற்ற மூவகை நெறிமுறைகளை 1932-ல் கண்டறிந்தார்.

அவையாவன:

(1) bh, dh, gh, ஆகிய ஆரிய மூச்சொலி முழங்கு நிறுத்தங்கள் (āpirated voiced stops) பின்னர் முறையே, b, d, g ஆகிய முழங்கு நிறுத்தங்களாகத் (voiced stops) திரிந்தன.