உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பிளேற்றோ (Plato, கி.மு. 427 -347) என்னும் அத்தேனிய மெ-ப் பொருளியலார் சொல்லிற்கும் பொருளிற்குமுள்ள தொடர்பு இயற்கை யானதென்றும், அவர்தம் தலைமை மாணவரான அரிசுற்றாட்டில் (Aristotle, கி.மு. 384 -22) அது செயற்கையானது அல்லது மரபுவழிப்பட்டது என்றும்

கொண்டனர்.

இத்துணையே எகிபதியரும் கிரேக்கரும் செ-த மொழியாரா-ச்சி.

பிரித்தானியில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வந்தேறி மொழியாகத் தோன்றிய ஆங்கிலம் என்னும் முக்குலக் கூட்டுமொழி, முதலில் கெலத்தி யத்தோடும் (Keltic) 6ஆம் நூற்றாண்டில் இலத்தீனோடும், 8ஆம் நூற் றாண்டிற் காண்டினேவியத்தோடும், 11ஆம் நூற்றாண்டிற் பிரெஞ்சு மொழி யோடும் கலந்தாலும், 14ஆம் 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி (Renaissance) என்னும் இலத்தீன் கிரேக்கக் கல்வியே ஆங்கிலரின் இலக் கியச் செம்மொழிக் கல்வித் தொடக்கமாகும். அன்றும், philology என்னும் மொழிநூற்பெயர், ஒரு மொழியை அதனைப் பேசும் மக்களின் அகக்கரண அறிவியல் மதவியல் குமுகவியல் வளர்ச்சியை அறியும் வாயிலாகக் குறித்த தேயன்றி, அம் மொழியையே கற்கும் பொரு ளாகக் குறிக்கவில்லை. philology என்னும் கிரேக்கச்சொல் விழைநூல் என்று பொருள்படுவதாகும். விழைதல் மிக விரும்புதல். இலத்தீன் கிரேக்கமொழிகள் மிகவிரும்பிக் கற்கப்பெற்றதினால், அவற்றின் கல்வி அப் பெயர் பெற்றது.

18ஆம் நூற்றாண்டிலேயே இற்றை மொழியாரா-ச்சி தோன்றிற்று. அவ் வறிவியற்கு, Science of Language, Linguistics (Linguistic Science), Glottology முதலிய பல பெயர்கள் புதிதா-த் தோன்றினும், philology என்னும் பழம்பெயரே சென்ற நூற்றாண்டு வரை பெருவழக்கா- வழங் கிற்று. - ஆயின் மொழியாரா-ச்சியையும் பன்மொழி யொப்பியலையுங் குறித்தற்கு ஒப்பியல் (Comparative) என்னும் அடை கொடுக்கப்பெற்றது.

இற்றை ஒப்பியன் மொழிநூல் உருவாவதற்கு இன்றியமையாத அடிப் படை வேலை செ-தவர்கள், உலகெங்கும் பரவித் தங்கிய ஐரோப்பிய விடையூழியரும் (Missionaries) குடியேற்ற நாடுகளின் அரசியலதிகாரி களுமே.

இந்தியாவிற்கு வந்த ஆங்கில அரசியல் அதிகாரிகளுள், வயவர் சாள்சு வில்கின்சு (Sir Charles Wilkins) என்பவர் சமற்கிருதங் கற்று, 1784 ஆம் ஆண்டில் பகவற்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்; வயவர்