உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

73

7. வடவர் மொழிநூல்

வடவர் மொழிநூல் வருமாறு:

ஆரிய வேதமொழியும் அதன்வழிப்பட்ட சமற்கிருதமும் தேவமொழி யாம். அவ் விரண்டும் ஒன்றே.

வேதங்கள் இறைவனைப்போல் தொடக்கமற்றவை. அவற்றின் மந் திரங்களொடு தொடர்புள்ள முனிவர், அவற்றை இறைவனருளால் கண்ட வரேயன்றி இயற்றினவரல்லர்.

முதற்காலத்தில் மூவுலக ஆட்சியும் சமற்கிருதத்திலேயே நடை பெற்றுவந்தது. இன்றும் வீட்டுலகிற் பேசப்பெறுவது அம் மொழியே.

அ டாத்யாயீ என்னும் பாணினீயத்தின் குறுங்கணக்கு நூற்பா பதினான்கும் சிவநூற்பாக்கள். அவை சிவபெருமான் உடுக்கையினின்றுந் தோன்றின. பாணினியாரின் இலக்கணத்தை அவர்க்கு அறிவுறுத்தியவர் இறைவனாரே.

ஆரியம் பிறமொழிகளினின்று கடன்கொள்ளாது. ஆயின் பிறமொழி களெல்லாம் அதனின்று கடன்கொள்ளும். மேலை யாரியமொழிகளும் இந்திய மொழிக ளெல்லாமும் ஆரியக் கிளைகளே, சமற்கிருதத் தினின்று பிராகிருமும் பிராகிருதத்தினின்று திரவிடமும் தோன்றின.

வேத மந்திரங்கள் இம்மை மறுமை வீடு ஆகிய மும்மையுந் தர வல்லன. அவற்றின் ஆற்றற்பாடு அவற்றின் துல்லிபமான பலுக்கலைப் பொறுத்தது. அப் பலுக்கல் சிறிது தவறினும் பேரிடர் விளையும். ஆதலால், பிராமணரே அவற்றை ஓதித் தாம் வழிபடவும், பிறரை வழிபடச் செ-யவும் வேண்டும்.

8. மேலை மொழிநூல் வரலாறு

வரலாற்றுத் தந்தை’ என்று சொல்லப்பெறும் எரோதாத்தசு (Herodotus. கி.மு. 485 -25), மொழிகளுள் முதலது எது என்று கண்டு பிடிக்க, ஓர் எகிபதிய அரசன் இரு குழவிகளைப் பிறந்தவுடன் வேறாகப் ரு பிரித்து வளர்த்த தாகவும், அவற்றுள் ஒன்று 'பெகோஸ்'என்னும் பிரிசியச் (Phrygian) சொல்லை முந்திச் சொல்லியதால், பிரிசிய மொழியே உலக முதன் மொழியென்று முடிபு செ-ததாவும் தம் நூலொன்றிற் குறித்திருக்கின்றார்.