உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இனி, மரபான தமிழ் வரிவடியை மாற்றியும், லகரளகரமெ-த் திரி தற்புணர்ச்சியைத் தோன்றற்புணர்ச்சியாகத் திரித்தும், வடசொற்களோடு ஆங்கிலச் சொற்களையும் உரைநடையிலுஞ் செ-யுளிலுங் கலந்தும், தமிழை இழித்தும் பழித்துங்கூறியும், தமிழைக் கெடுத்த சிறியாரும் பெரியாரும் எத் துணையோ பலர் என அறிக.

6. மறைமலையடிகள் மாண்பு

தம் வாழ்நாள் முழுதும் தமக்கென வாழாது தமிழ்க்கெனவும் தமிழர்க்கெனவும் வாழ்ந்து, ஆரியத்தாற் குறைப்புண்டும் அயற்சொற் களால் நெருக்குண்டும் சுருக்குண்டும் அகப்பகைவரால் இழிப்புண்டும் பழிப்புண்டும் அடியோடழிந்துபோம் நிலையிலிருந்த தமிழைத் தம் முக்கரணத்தாலும் ஒல்லும் வகையாற் செல்லும் வழியெல்லாம் ஓவாது போற்றிக்காத்து, ஆரியத்தினின்று அறவே மீட்டு, பல்லவபுரம் பொது நிலைக் கழகம் நிறுவியும், 'அறிவுக்கடல்' ஆராச்சியிதழ் நடத்தியும், அவைகளிற் சொற்பொழிவாற்றியும், பல்வேறு துறைகளிற் பயன்மிக்க நூல்களியற்றியும், தென்மதுரைத் தீந்தமிழை மீண்டும் தோற்றுவித்து, இனி இவ் வுலகுள்ளளவுந் தொடரும் புத்தூழியைத் தொடங் கிவைத்த ஒப்புயர் வற்ற மாபெருந் தமிழறிஞர் மறைமலையடிகள்

தமிழ்க்கால முப்பெரும் பிரிவு

(1) குமரிக்காலம் அல்லது தனிநிலைக் காலம் -தோரா கி.மு. 50, 000 -1500. (2) இடைநிலைக்காலம் அல்லதுக் காலம் தோரா.கி.மு. 1500-கி.பி. 1916 -

கலவை.

(3) மறைமலைக்காலம் அல்லது மறுமலர்ச்சிக்காலம் -கி.பி. 1916 உலகிறுதி.

இங்ஙனம் தமிழொடு இரண்டறக் கலந்த மறைமலையடிகளை ஏனைப் புலவருளொருவராகக் கருதுவதும், அடிகள் தொடர்பின்றியுந் தமிழிருப் பதாக மயங்குவதும், தமிழறியாமையையே காட்டும். தமிழ்த்தொண்டர் திருக்கூட்டத்தில் மறைமலையடிகட்கு அடுத்தபடியாகப் பெருமைவா-ந்த திரு.விக. அவர்களும்,

என்று

மறைமலையடிகளால் தென்னாடு விழிப்புற்றதை மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும். அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் கூறியிருத்தல் காண்க.