உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

71

நிலைமைக்கு இழுக்குநேராதவாறு, அவ் வகர முதலித் திருத்தத்திற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையிட்டு வருகின்றனர்.

அத் திருத்தம் முன்னரே நிகழ்ந்திருப்பின், பேரா, பரோவும் பேரா. எமெனோவும் அவ் வகரமுதலியை அடிப்படையாகக் கொண்டு தம் திர விட ஒப்பியல் அகரமுதலியை வழுப்படத் தொகுத்திரார்; கோலாலம்பூரி லும் சென்னையிலும் உலகத் தமிழ்ப் பழிப்பு மாநாடுகள் நிகழ்ந்திரா; மறை மலையடிகளின் 'தா-மொழி'க் கட்டுரைக்கு எதிர்ப்பும் எழுந்திராது.

சிலர் மேனாட்டு மொழிநூலறிஞரின் நூல்களைப் படித்திருப்பத னாலேயே தங்களையும் மொழிநூலதிகாரிகளாகக் கருதிக்கொள்கின்றனர். படிப்பு வேறு; ஆரா-ச்சி வேறு என்பதை அவர் அறிவதில்லை. மேனாட் டார் சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழிநூலை வளர்த் திருப்பதால், அது தமிழுக்கும் உண்மைக்கும் மாறானது என்பதும் அவர்க் குத் தெரிவதில்லை.

தமிழ் ஆரியத்திற்கு அடிப்படுத்தப்பட்டிருப்பதால், அதை முதலில் மீட்காது அதனை வளர்த்தல் இயலாது. இதற்கு இன்றியமையாத துணை உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நடுநிலை மொழிநூலே.

(12) சிவமடத் தலைவர்

இனி. தமிழ்நாட்டிலுள்ள சிவமடங்களும்- குன்றக்குடி தவிர ஏனைய வெல்லாம்- பிற்காலத்து ஆரிய வேதங்களையே இன்னும் அடிப்படை யாகக் கொண்டு சிவநெறியைப் போற்றிவருவதால், ஆரிய வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சிவநெறியும் அதனொடு சேர்ந்த தமிழும் அளவிறந்து கெடுகின்றன. இங்ஙனம் கெடுத்தற்குக் கரணியம் ஆரியத்திற்கு மாறாகச் சிவனியத்தை சிவமடங்களையும் அரசியலின்

வளர்த்தால்

அறப்புறத்திணைக்களத்திற்கு

உட்படுத்திவிடுவர் என்னும் அச்சமோ,

உண்மையான வரலாற்றை அறியாமையோ அறிகிலம்.

(13) தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர்

தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர், இந்தியை ஆட்சிமொழியாக ஏற் றுத் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயப் பாடமாகப் புகுத்தி, எதிர்காலத்தில் தமிழ் கெடுவதற்கும் இறந்துபடுவதற்கும் வழி கோலவும் துணிந்தனர்.