உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

77

வரலாறுகளையும் (Biographies of Words) வெளியிட்டார். பல்லாண்டுகளாகக் கீழைத் திருப்பனுவல்களையும் (Sacred Books of the East) பதிப்பித்தார். அவற்றின் வாயிலாகச் சமற்கிருதப் பற்றையும் ஊட்டி வந்தார்.

மேலை மொழிநூல் வல்லாருள் தலைவராகக் கொள்ளப்படுவர் இவரே. இவராலேயே ஒப்பியன் மொழிநூல் ஒருவாறு நிறைவடைந்து உலகெங்கும் பரவிற்று.

ஆட்டோ போத்திலிங்கு (Otto Bohtlingk) என்னும் செருமானியர் (1815 - 1904) 1839-ல் பாணினி யிலக்கணத்தையும், 1845-ல் சமற்கிருதச் சிறப்புப் பகுதிகளையும், அதன்பின் 1856 முதல் 1875 வரை தொகுத்த 7 மடலங் கொண்ட சமற்கிருத அகரமுதலியையும், வெளியிட்டார். இவ் வகரமுதலித் தொகுப்பில் உருடால்பு ராத்தும் (Rudolph Roth) உடனுழைத்தார்.

யோசியா துவைத்து விற்றினி (Josiah Dwight Whitney) என்னும் அமெரிக்கர், 1856-ல் அதர்வ வேத சங்கிதையையும், 1875-ல் ‘மொழி யிற் கருவியும் வடிவமும்' என்னும் நூலையும், 1873-5-ல் 'கீழைக்கலை மொழி நூலா-வு' என்னும் நூலையும், 1876-ல் ‘மொழியின் வாழ்க்கையும் வளர்ச்சியும்' என்னும் நூலையும், 1879-ல் சமற்கிருத இலக்கணத்தையும், 1881– ல் ‘மொழியிற் கலப்பு' என்னும் நூலையும் வெளியிட்டார்; பேத்தி லிங்கின் அகரமுதலிக்கும் இடையிடைச் சொற்கள் உதவினார். இவர் சில சமயங்களில் மாக்கசு முல்லர் கொள்கையைக் கடிந்ததுண்டு.

1856-ல் கால்டுவேல் மேற்காணியார் (Bishop),தம் உலகப் புகழ் பெற்ற திரவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தை வெளியிட்டார். அந் நூல் தமிழின் சிறப்பையும் தமிழன் பெருமையையும் உலகத்திற் கெடுத்துக் காட்டுவதிற் சாண் ஏறி முழஞ் சறுக்கினதாகும்.

கால்டுவெல் ஐயர் அயர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்து, பண்டை ச் செந்தமிழ் நாடாகிய பாண்டிநாட்டின் தென்பால் தங்கி, பதினெண் ணாண்டு அயராதுழைத்துத் தமிழைச் சிறப்பாக ஆ-ந்து கற்றபின் தம் ஒப்பியலிலக்கணத்தை எழுதினாரேனும், அக்காலத்துச் சூழ்நிலைகளும் சுற்றுச் சார்பும் அவர் தமிழின் உண்மையான இயல்பை அறியமுடியாவாறு அமைந்திருந்தன.