உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

(1)

(2)

(3)

(4)

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இதுபோதுள்ள பண்டைத் தமிழ்நூலாகிய தொல்காப்பியமும் கடைக் கழக நூல்களும், அக்காலத் தலைமைத் தமிழ்ப்புலவர்க்குந் தெரியாது மறையுண்டு கிடந்தன.

மறைமலையடிகள் போலுந் தனித்தமிழ்ப் புலவர் அக்காலத்தில் இல்லை.

தமிழன் பிறந்தகம் குமரிநாடென்பது அக்காலத்து ஒருவர்க்குந் தெரியாது.

இக்காலத்திற் போன்ற இனவிழிப்புணர்ச்சி அக்காலத் தமிழர்க்கில்லை. (5) எல்லா வகையிலும் ஆரிய மேம்பாட்டைத் தமிழர் அனைவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

இனி, ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத் தும் அழியுண்டதும், இந்திய நாகரிகம் முழுவதையும் காட்டும் இலக்கியம் இன்று சமற்கிருதத்திலிருப்பதும், எல்லாத் துறையிலும் பிராமணர் முன்னேறி யிருப்பதும் கால்டுவெலார்க்குத் தமிழ நாகரிகத்தைப் பற்றி யிருந்த தாழ்வான கருத்தை வலியுறுத்திவிட்டன.

தமிழ் நாகரிகம் கொற்கையில் தோன்றி ஆரியர் வருமுன் நகர நாட்டு(City State) நிலையே அடைந்திருந்ததென்றும், தமிழர்க்கு ஆழ் கடற் செலவின்மையால் இலங்கைதவிர வேறொரு தீவுந் தெரியாதென்றும், தமிழ் நெடுங்கணக்கும் எண்வேற்றுமையமைப்பும் சமற்கிருதத்தைப் பின் பற்றியவையென்றும், உயர்கலைகளையெல்லாம் தமிழர் ஆரியத் திடத் தினின்று கற்றுக்கொண்டனரென்றும், பல அடிப்படைத் தென்சொற் களை வடசொற்களென்றும், கூறித் தம் அறிதல் வா-ப்புக் குறைவினால் தமிழரை மிகமிகத் தாழ்த்தி யெழுதிவிட்டனர்.

இரண்டாம் பதிப்பில் ஓரளவு தமிழ்ப் பெருமையை வெளியிட்ட தற்கும், மலையாள மொழியறிஞரான குண்டர்ட்டு, தமிழறிஞரான போப்பு, கன்னட மொழியறிஞரான கிற்றெல் முதலியோரே பெரிதுங் கரணியம் என அறிதல் வேண்டும்.

பேரா. (K.A). நீலகண்ட சாத்திரியார் தம் 'தமிழர் வரலாறும் கலை நாகரிகமும், என்னும் நூலில், தமிழரைத் தாழ்த்தி யெழுதியதற்குக் கால்டு வெலார் மதிப்பீட்டையே சான்றாகக் காட்டியிருப்பதால், கால்டுவெலார் ஒப் பியல் இலக்கணத்தை இயற்கைக் கேலாதென்று தள்ளுவதே தக்கதாம்.