உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

2. என் உலக்கை குத்துக் குத்து

ஆடு முறை : இருபது சிறுமியர்போல் ஒரு வீட்டு முற்றத்தில் வட்டமாக நெருங்கி யிருந்து, நடுவண் (மையம்) நோக்கிக் கால்நீட்டி ஒருத்தி பாதத்தோடு ஒருத்தி பாதத்தைச் சேர்த்துவைத்து, ஒவ்வொருத்தியும் இரு முழங்கையாலும் இரு விலாவையும் இடைவிடாது அடித்துக்கொண்டும், “என் உலக்கை குத்துக் குத்து, அக்கா உலக்கை சந்தைக்குப் போ" என்று மடக்கி மடக்கிப் பாடிக்கொண்டு, மெல்ல மெல்லப் பெயர்ந்து சுற்றிச் சுற்றி இயங்கிக்கொண்டே யிருப்பர்.

ஆட்டுத் தோற்றம் : தமக்கைக் கொன்றும் தங்கைக் கொன்றுமாகக் குறிக்கப்பட்ட ஈருலக்கைகளுள், தமக்கையினது சந்தைக்கு விற்பனைக்காகப் போக, தங்கையினது தங்கிப்போன தினால், அவள் மகிழ்ச்சியோடு அதனால் குத்தின செயலை, இவ் விளையாட்டு நினைவு கூர்விக்கின்றது போலும்!