உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

87

3.

3. ஊதா மணி

பல பிள்ளைகளுள் மூவர் கைகோத்துச் ‘சாட் பூட்திரி' என்று சொல்லிக்கொண்டு மூன்றுதரம் கை அசைத்துத் திரி என்று சொன்னவுடன் கையை யுருவிக் கைமேற்கை வைப்பர். மேற்கை, அகங்கை மேனோக்கியிருந்தால் 'வெள்ளை' என்றும், புறங்கை மேனோக்கியிருந்தால் 'கருப்பு' என்றும், சொல்லப்படும். இவ் விரண்டில் எவ்வகையிலேனும், தனியாக வைத்த பிள்ளை விலகிவிட வேண்டும். பின்பு, ஏனையிருவரும் முதலிற் சேராத வேறொரு பிள்ளையுடன் கைகோத்து, முன்போன்றே ஒரு பிள்ளையைப் பிரிக்கவேண்டும். மூவரும் ஒரே வகையாய்க் கைவைத்திருந்தால், மீண்டுங் கோக்கவேண்டும். இங்ஙனம் மும்மூவராய்க் கைகோத்து ஒவ்வொருத்தியைப் பிரித்தபின், இறுதியில் இருவர் இருப்பர். அவ் விருவருடன், முதன்முதற் பிரிந்த பிள்ளை ‘ஒப்புக்கு' என்று சொல்லிக் கைகோக்கும். முன்பு பிரியாத இருவருள் யாரேனும் ஒருத்தி தனிவகையிற் கைவைப்பின், அவள் விலகிவிட, அவள் விலகிவிட, அடுத்தவள்

அகப்பட்டுக்கொள்வாள்.

அகப்பட்டுக் கொண்டவள் சற்றுத் தொலைவிற்போய் நிற்க, அவளுக்கு முன்னமே காட்டப்பட்ட ஒரு மணிமாலை அல்லது வேறோர் அணி, ஒரு பிள்ளையிடம் ஒளித்து வைக்கப்படும். தொலைவில் நிற்பவள், “வரலாமா?” என்று கேட்டு, “வரலாம்” என்று சொன்னபின் வந்து, மணிமாலை வைத்திருக்கிறவள் என்று ஒரு பிள்ளையை ஊகிப்பாய்ச் சுட்டிக்காட்டும். இல்லாதவள் எழுந்து நிற்பாள். ஐயத்திற்கிடமாயிருப்பின், அவள் மடி முகலியவற்றைப் பிடித்துப் பார்க்கலாம். ஒருமுறை கண்டுபிடிக்கத் தவறினவள் மறுமுறையுங் கண்டு பிடித்தல் வேண்டும். மணிமாலை வைத்திருப்பவளைக் கண்டுபிடித்தல் கண்டுபிடித்துவிடின், மற்றெல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, ஊதாமணியைக் கண்டு பிடித்தால் கைதட்டுவோம்" என்று பாடிக் கைதட்டி மகிழ்வர். இது தெருவிலும் து ஊர்ப்பொட்டலிலும்

66

விளையாடப்பெறும்.

6