உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

95

அடுத்த குழியிலுள்ள கற்களை எடுக்கும்போது, யாரும் யார் காயையும் எடுக்கலாம்.

அவரவர்

குழிகளிலுள்ள பசுவை அவரவர் எடுத்துக்

கொள்ளவேண்டும்.

6

எல்லாக் காயும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின், அரசன் ஏனையிருவர்க்கும் ஒவ்வொன்று கொடுத்துவிட வேண்டும். அதன்பின், அவனுக்கு 6 குழி நிரம்பினால் (அதாவது 30 காய் இருந்தால்), அவனுக்கு வெற்றியாம். என்றும், யார் மிகுந்த காய் எடுக்கின்றனரோ அவருக்கே வெற்றியாம். வென்றவர் தமக்கடுத்த மேற்பதவியும் தோற்றவர் தமக்கடுத்த கீழ்ப்பதவியும் அடைதல் வேண்டும். அரசன் வெல்லின் தன் பதவியைக் காத்துக் கொள்வான். ஆயின், அரசனும் மந்திரியும் மூன்றுமுறை தொடர்ந்து பழமாயின், கீழ்ப்பதவி யடைதல்வேண்டும். உலக வாழ்க்கையி லுள்ள ஏற்றிறக்கம் இவ் விளையாட்டால் உணர்த்தப்படுவது, கவனிக்கத்தக்கது.

IV. அசோகவனத் தாட்டம்

ஆட்டின் பெயர் : ஒருவர் தமித்திருக்கும்போது தாமாய் ஆடி க்கொள்ளம் பண்ணாங்குழியாட்டுவகை, அசோக வனத்தில் தனித்திருந்ததாகச் சொல்லப்படும் சீதையொடு தொடர்புபடுத்தி, அசோகவனத்தாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆடுகருவி : கட்டுக் கட்டற்குரியவையே இதற்கும்.

ஆடுமுறை : இருகுழி வரிசையுள்ளும், மேல்வரிசையில், முறையே ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் ஏழுமாக மேன்மே லேற்ற முறையிலும், கீழ்வரிசையில், முறையே ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாக மேன்மேலிறக்கமுறையிலும், இடவலமாகக்காய்களைப் போட்டுக்கொள்ள வேண்டும்.இங்ஙனமன்றி, மேல்வரிசையில் மேன்மேலிறக்க முறையிலும் கீழ்வரிசையில் மேன்மே லேற்ற முறையிலும் போட்டுக்கொள்ளலாம். எங்ஙனமாயினும், இருவரிசை யிலும் ஏற்றிறக்க முறை மாறியிருத்தல் வேண்டுமென்பதே விதியாம்.