உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

தொடங்கும்போது கீழ்வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்று (அதாவது 7 காய்கள் உள்ள குழியினின்று) தொடங் கல் வேண்டும்.காய்களைக் குழிக்கொன்றாகப் போட்டுச் செல்லும்போது, பிறவகை யாட்டுகளிற் போன்றே கீழ்வரிசை யில் இடவலமாகவும் மேல் வரிசையில் வலஇடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். காய்களைப் போட்டு முடிந்தபின், கடைசி யாகப் போட்ட குழிக்கு அடுத்த பெருந்தொகைக் குழியினின்று காய்களை எடுத்தாடவேண்டும். அது கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்தே

யிருக்கும்.

வெறுங்குழி அமைவதும், அதைத் துடைத்து அடுத்த குழி யிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வதும், இவ் விளையாட்டில் இல்லை.

மேற்சொன்னவாறு (அதாவது என்றும் ஒரு வரிசையி லுள்ள பருந்தொகைக் குழியினின்றே காயெடுத்து) ஒன்பது முறை தொடர்ந்து ஆடின், ஆட்டந் தொடங்குமுன் போட்டிருந்த வாறே, அவ்வக் குழிகளிற் காய்கள் அமைந்துவிடும். அங்ஙனம் இராவிடின் ஆடினது தவறென்று அறிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமித்தாடுதற்கேற்ற விருப்பத்தை இவ் விளையாட்டு உண்டுபண்ண வல்லது.

குறிப்பு : பண்ணாங்குழி பெண்பிள்ளைகட்கே ஏற்றதாயினும், பையன் களாலும் ஆடப்படுவதுபற்றி இருபாற் பகுதியிற் கூறப்பட்டதென்க.