உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ஆடுகருவி : வரிசைக்கு மூன்று ஆக இரு நட்டு வரிசையாக ஆறு கட்டங்கொண்ட ஒரு நீள்சதுர அரங்கும், ஆடகர் ஒவ்வொருவர்க்கும் அரையங்குலக் கனமும் ஈரங்குல விட்டமுமுள்ள ஒரு வட்டமான கல் அல்லது ஓட்டாஞ்சல்லியும், இதை ஆடு கருவியாம். அரங்கு, பொதுவாக, ஆறடி நீளமும் நாலடி அகலமும் உள்ளதாயும், மேற்குறும்பக்கத்தில், 'சமுத்திரம்' என்னும் ஒர் அரைவட்டங் காண்டதாயும், இருக்கும். அவ் வரை வட்டத்தின் வட்டத்தின் உச்சியில் சிறுபான்மை அமைக்கப்படும் ஒரு சிறு வளைவு, 'கும்பக்குடம்’ எனப்படும். கட்டங்கட்குத் தட்டுகள் என்று பெயர். கல்லிற்கு அல்லது ஒட்டாஞ் சல்லிக்கு வட்டு என்று பெயர்.

று

பெருமுற்றமும்

ஆடிடம்: அகன்ற தெருவும் பெரு முற்றமும் பொட்டலும் இதை ஆடிடமாம்.இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.

ஆடுமுறை : உடன் உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்

படியோ யார் முந்தி யாடுவதென்று துணிந்துகொண்டு இருவருள் ஒருவர் ஆடத் தொடங்குவர், திருவுளச்சீட்டுத் தீர்ப்பு, காசு சுண்டி அல்லது வட்டெறிந்து அறியப்பெறும்.

ஆடுபவர், அரங்கிற்கு முன் நின்று,இடவரிசை முதற்கட்டத்தில் தம் வட்டையெறிந்து, நொண்டியடித்து ஒரேயெட்டில் அவ் வட்டை மிதித்து, அதைக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் நொண்டியடித்து ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும்.

எறியப்பட்ட வட்டு கட்டத்திற்கப்பால் வீழினும் கட்டத்திற் குள்

விழாது கோட்டின்மேல் வீழினும், நொண்டியடித்துக்

கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரேயெட்டில் வட்டை மிதிக்கத்தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும் தூக்கிய காலை ஆடும்போது கீழே ஊன்றினும், காலால் ல் வெளியே தள்ளப்பட்ட வட்டு முதற்கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க இயலாதவாறு தொலைவிற் சென்றுவிடினும், ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடவேண்டும்.இங்ஙனம் மாறி மாறிக் கடைபோக ஆடுவர்.

முதற்கட்ட ஆட்டுத் தவறாது ஆட்டுத் தவறாது முடியின், அடுத்த இரு கட்டங்களிலும், பின்பு சமுத்திரத்திலும், அதன்பின் வலப்புற