உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

99

முக்கட்டங்களிலும், முறையே முன்போல் ஆடவேண்டும். 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் கட்டங்களில் ஆடும்போது, கட்டந்தொறும் மிதித்து நொண்டியடிப்பதும், ஒரு கட்டம் இடையிட்டு நொண்டியடிப்பதுமாக, இருவேறு முறையுண்டு. இவற்றுள் பின்னதே பெரும்பான்மை. வட்டைக் காலால் தள்ளுவதிலும், மிதிக்கக் கூடிய கட்டங்கட்டமாய்த் தள்ளுவதும், ஒரேயடியாய் வெளியே தள்ளுவதும், என இருமுறை யுண்டு.

என்றும் இடவரிசைக் கட்டங்களின் வழியாகவே அரங்கிற்குட் புகவேண்டியிருத்தலின், இடவரிசைக் கட்டங்களும் சமுத்திரமும் முறையே கீழிருந்து மேலாகவும், வலவரிசைக் கட்டங்கள் முறையே மேலிருந்து கீழாகவும், ஆடப்பெறும் என்பதை அறிதல் வேண்டும்.

இருவரிசைக் கட்டங்களும் ஆடப்பட்டபின், அரங்கின் முன்நின்று, ஆயின் அரங்குப் பக்கம் புறங்காட்டித் தலைக்கு மேலாக, சமுத்திரத்தில் விழுமாறு வட்டையெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று மிதித்துக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் மிதித்தல் வேண்டும். இங்ஙனம் இடையில் ஒன்றும், இறுதியில் ஒன்றுமாக, இருதடவை சமுத்திரத் தில் வட்டெறிந்து ஆடப்படும். முதல் தடவை எதிர்நோக்கியும், இரண்டாம் தடவை புறங்காட்டியும், வட்டெறிவதே வேறுபாடாம்.

யாரேனும் ஒருவர் இரண்டாந்தடவை சமுத்திரத்தில் தவறாது ஆடியபின்,ஆட்டை முடியும். வெற்றிபெற்றவர், அரங்கிற்கு வெளியே முன்புற மூலையொன்றை யடுத்து, குதிங்காலை நடுவாக வூன்றிப் பெருவிரல் அல்லது பாதத்தால் ஒரு வட்டம் வரைவர். அதற்கு ப்பு என்று பெயர். அதை வரைதல் ‘உப்பு வைத்தல்' எனப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வோர் உப்பு முன்னேர் வரிசையாக வைக்கப்பெறும். முந்தி வென்றவர் அரங்கின் இடப்புற மூலையடுத்தும், பிந்தி வென்றவர் அதன் வலப்புற மூலை யடுத்தும் உப்புவைத்தல் மரபு. அரங்கிற்கு முன்னால் தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்க முடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உ ப்பு வழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.