உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ஆட்டுத் தோற்றம் : ஒருகால், இவ் விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.

ஆட்டின் பயன் : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் ஒரு பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ் விளையாட்டின் பயனாம்.

(2) சோழ கொங்குநாட்டு முறை

கட்டங்கள்

LO

5

I. ஒற்றைச் சில்லி

6

ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் சில்லி என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி ஒற்றைச் சில்லி எனப்படும்.

மலை

4

3

6

2

7

ஆடுவார் தொகை : இருவர் இதை

1

8

ஆடுவர்.

ஆடு கருவி

சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.

நான்கு சமகட்டங்கள் காண்டதும்,ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு சில்லி (சில்லாக்கு) எனப்படும் வட்டும், இதற்குரிய கருவிகளாம். அரங்கின் மேற்பகுதியான அரைவட்டத் திற்குச் சோழநாட்டில் மலை என்றும் கொங்குநாட்டில் கரகம் என்றும் பெயர். சேலம் வட்டாரத்திற் கரகங் கீறாமலும் ஆடப்பெறும்.

ஆடுமுறை : முதலாவது முதற் கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அக் கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வோர் எட்டில் மிதித்துச் சென்று கரகத்தில் அல்லது கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி, மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லியை மிதித்து வெளியே தள்ளி, அதை ஓர் எட்டில் மிதித்தல் வேண்டும்.