உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

101

இங்ஙனம் பிற கட்டங்களிலும், தொடர்ந்து சில்லியெறிந்து ஆடல்

வேண்டும்.

மேற் கட்டங்களில் எறிந்த சில்லியை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக்கொண்டு வந்து, அடிக்கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே யெட்டில் மிதித்தல் வேண்டும்.

கட்டங்களினூடு

செல்லும்போதும்

மீளும்போதும், நொண்டியடிக்க வேண்டியபோதெல்லாம், நொண்டியடித்தே

சென்று மீளவேண்டும்.

எறியப்பட்ட சில்லி கட்டத்திற்கப்பால் வீழினும், கட்டத்திற் குள் வீழாது கோட்டின்மேல் வீழினும் நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரேயெட்டில் சில்லியை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும், நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட சில்லி முதற் கட்டத்தினின்று ஒரேயெட்டில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் செல்லினும் ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடல்வேண்டும்.

முடியும்வரை இருவரும் மாறிமாறி யாடுவர்.

இங்ஙனம்,

ஆட்டை

நாலு கட்டத்திலும் சில்லியெறிந்தாடியபின், அகங்கையில் ஒருமுறையும் புறங்கையில் ஒருமுறையும் குத்துக்கைமேல் ஒருமுறை யும் சில்லியை வைத்துக்கொண்டு, கரகம்வரை நொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். கரகத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.

அதன்பின், தலைமேல் ஒருமுறையும் வலப்பாதத்தின்மேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டத்தை யும் ஒவ்வோர் எட்டில் மிதித்துக் கரகம் வரை நடந்து சென்று நடந்து மீளவேண்டும்.

பின்பு, அரங்கிற்கு முன் நின்று, கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கு நின்று அரங்கிற்கு முன்பாகச் சில்லியெறிந்து, அங்கிருந்து நொண்டியடித்து வந்து அதை மிதித்தல் வேண்டும்.