உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

பின்னர், மீண்டும் ஒருமுறை கரகத்தில் அல்லது மேற்புற வளியில் சில்லியெறிந்து, கண்ணை மூடிக்கொண்டாவது மேனோக்கிக் கொண்டாவது ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒவ்வோர் எட்டுவைத்து நடந்துசென்று, சில்லியை மிதித்தல் வேண்டும். ஒவ்வோர் எட்டுவைக்கும் போதும் “அமரேசா” என்று சொல்லவேண்டும். கால் கோட்டில் படாது எட்டுச் சரியாயிருப் பின், எதிரியார் உடன் உடன் “ரேசு” (அமரேசு) என்று வழிமொழி வர்; சரியாயில்லாவிடின் 'இல்லை” என்பர். அதன்பின் எதிரியார் ஆடல்வேண்டும்.

66

66

எக்

‘அமரேசா”ப் பகுதி தவறாது முடியின்; எதிரியாரை “யானையா, பூனையா?” என்று வினவி, “யானை” என்று சொல்லின் நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகவும், “பூனை” என்று சொல்லின் குனிந்து இருகாற் கவட்டூடும் சில்லியை ஒரு கட்டத்திற்குள் எறியவேண்டும். அது எ கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக் குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப்படும். பழம் போட்ட கட்டத்திற்குள் எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்ல வேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக் கட்டத்திற்கு வெளியே வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தையொட்டி ஓர் அரைவட்டம் அமைத்துக் கொடுக்கப்படும் . அதற்கு ‘யானைக்கால்' என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக்கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக்கால் அமைத்துக் கொடுப்பர்.

ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்துவிடின் தவறாம்.

ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும்.