உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

105

சென்று, பின்பு அங்கிருந்து அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியேதள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும்.

ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்றவேண்டும்.

இங்ஙனம் எட்டாங் கட்டம்வரை ஆடல் வேண்டும். சில்லி யிருக்கிற கட்டம் எதுவாயினும், மேலே செல்லும்போது அதை மிதித்தல் கூடாது; கீழே வரும்போதுதான் அதை மிதித்தல் வேண்டும். ஆகவே கீழிரட்டையிலாயினும் மேலிரட்டையிலாயினும் சில்லி இருக்கும்போது, அதிற் பிறசமயம்போல் இருகாலும் ஊன்ற முடியாது. சில்லியுள்ள கட்டத்தை விட்டுவிட்டுச் சில்லியில்லாத கட்டத்தைத் தான் ஒற்றைக் கட்டம்போல் நொண்டியடித்து மிதித்துச் சென்று மீளவேண்டும். மேற்செல்லும் போதும் கீழ்வரும்போதும், கட்டங்களின் எண்முறைப்படியே சென்றுவரவேண்டும். கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாகத் தள்ளும்போது, கட்டங் கட்டமாகவும் தள்ளலாம்; ஒரேயடியாகவுந்தள்ளலாம்.

எட்டுக் கட்டங்களும் இங்ஙனம் ஆடப்பட்டபின், ஒற்றைச் சில்லியிற்போல், வெள்ளைக்கையும் கருப்புக்கையும் குத்துக்கையும் தலையும் காலும், முறையே ஆடப்பெறும். தலையுங்காலும் ஆடும்போது, இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இருகாலும் வைத்தல் வேண்டும்.

அதன்பின், மலைக்குச் சில்லியெறிந்து நொண்டியடித்துச் சென்று மிதித்து, பின்பு அங்கிருந்து முன்புறமாகத் தள்ளி அவ்வாறே வந்து மிதித்தல் வேண்டும். இப் பகுதி நொண்டி எனச் சிறப்பித்துக் கூறப்படும். இதிலும், இரட்டைக் கட்டத்தில் இருகாலும்

ஊன்றவேண்டும்.

பின்பு, மலைக்கு மீண்டு சில்லி யெறிந்து அமரேசா’ ஆடிச்சென்று மிதித்தல் வேண்டும். இரட்டைக் கட்டத்தில் ஒரே சமையத்தில் இருகால் வைத்தல் வேண்டும்.

எதிரியாரை

66

யானையா,

பூனையா ?

அமரேசா’ முடிந்தபின், மலையில் நின்றுகொண்டு என் று கேட்டு, பதிலுக்கேற்பச் சில்லியெறிந்து, நொண்டியடித்துவந்து அதை