உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்றுகொண்டு, “பழம் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமா? வந்து பழம் போட வேண்டுமா? என்று எதிரியாரை வினவி, முன்னது குறிப்பின் போட்டுவிட்டு நொண்டியடித்து

முன்வரவேண்டும்; பின்னது குறிப்பின் நொண்டியடித்து அரங்கிற்கு முன்புறமாக வந்தபின் சென்று போடவேண்டும்; போட்டபின் ஆட்டை முடியும்.

'நொண்டி'யிலும் ‘அமரேசா'விலும் தவிர, பிற பகுதி

களில் மலைக்குச் செல்வதில்லை.

ஆட்டத்தில் தவறும் வகையும், அதன்பின் நிகழும் செயலும், பிற சில்லிகட்குக் கூறியவையே.

ஓர் ஆட்டையில் வென்றவர் அடுத்த ஆட்டையில் முந்தியாடுவர்.

80

100

20

09

40

900

00/

009/009

1000

/100/200 30

400

IV. வட்டச் சில்லி

ஆட்டின் பெயர் : வட்டமான அரங்கு கீறி ஆடும் சில்லி வட்டச் சில்லியாம்.