உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

107

ஆடு கருவி : சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதை ஆடு கருவியாம்.

சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத் தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத் தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும்.

ஆடுமுறை : முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அதை ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து மேன்மேலுயர்ந்த தொகையுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த சில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டுமேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல்

கூடாது.

ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆடல் வேண்டும்.

குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர் (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்), கெலித்தவ ராவர். கெலிப்பதற்குப் பழம் என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும். உப்புக்குள், வட்டையி னின்று தொடங்கி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு வரிசையாக இருக்கும். வெளியே தள்ளப்பட்ட சில்லி ஒரெயெட் டில் மிதிக்க முடியாதவாறு தொலைவிலிருப்பின், ஆடுபவர் தாம் வைத்த உப்பு வரிசைமேல் நடந்துசென்று அதை மிதிக்கலாம்.

V. காலிப்பட்டச் சில்லி

ஆட்டின் பெயர் : காலிப்பட்டம் போல் அரங்கு கீறி ஆடும் சில்லி காலிப் பட்டச் சில்லியாம்.

காற்றிற் பறக்கவிடும் பட்டத்தைக் வடார்க்காட்டு

காலிப்பட்டம்

மாவட்டத்தார்.

என்பர்

СЛ

4

3

2

1