உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ஆடுகருவி : மூலைக்குறுக்குக் கோடிட்ட ஒரு சதுரமும், அதையொட்டிய படுக்கையான ஒரு சிறு நீள் சதுரமும் கொண்ட ஒரு பெரு நீள்சதுர அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடு கருவியாம். மூலைக் குறுக்குக் கோடிட்ட சதுரம் நான்கு கட்டமாக அமையும். மேலுள்ள நீள்சதுரம் ஐந்தாங் கட்டமாகும்.

ஆடுமுறை : முதலாவது முதற்கட்டத்திற் சில்லியெறிந்து, அதை ரேயெட்டில் நொண் டியடித்து மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் அதை முன்போல் மிதித்தல் வேண்டும். பின்பு மேற்கட்டங்களிலும் சில்லி யெறிந்து, எண் முறைப்படி கட்டங்கட்டமாய் நொண்டியடித்துச் சென்று மிதித்து, நேரடியாகவோ கட்டங்கட்டமாகவோ வெளியே தள்ளி, முன் போன்றே நொண்டியடித்து வந்து மிதித்தல் வேண்டும்.

மலை வேண்டுவாருள் சிலர், ஐந்தாங் கட்டத்தை மலையாகக் காள்வர். அங்ஙனங் கொள்ளாதார், அதன் மேற்புற வெளியை அங்ஙனம் பயன்படுத்துவர். மலைக்குச் சில்லி யெறியும்போது எதிர்நோக்கியும், மலையிலிருந்து சில்லி யெறியும்போது புறங்காட்டித் தலைக்கு மேலாகவும், எறிவது வழக்கம். பழமானவர் உப்பு வைப்பர். இங்ஙனம் எளியமுறையில் இதை ஆடுவது வடார்க்காட்டு வழக்கமாம்.

சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’ என்பவற்றையும் சேர்த்துக்கொள்வர்.

இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4ஆம் அல்லது 5ஆம் கட்டத்தில் வீழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் வீழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை நொண்டியடித்துத் தள்ளிக்கொண்டு போய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம்.

VI. கைச்சில்லி

தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக் கொள்ளும் ஆட்டு கைச்சில்லியாம். இது சேலம் வட்டாரத்தில் ஆடப்பெறும்.