உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

4. கச்சக்காய்ச் சில்லி

ஆட்டின் பெயர் : கச்சக்காயைச் சில்லியால் அடித்து ஆடும் ஆட்டுக் கச்சக்காய்ச் சில்லி.

ஆடுவார் தொகை : பலர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஆளுக்குப் பத்திற்குக் குறையாத பல கச்சக்காய் களும், அகன்ற சில்லியும், ஓரடி விட்டமுள்ள ஒரு வட்டமும், இதை ஆடுகருவியாம். சில்லிக்கு வடார்க்காட்டு வட்டத்தில் சப்பாத்தி என் று

பயர்.

ஆடிடம்: பொட்டலில் இது ஆடப்பெறும்.

ஆடுமுறை : ஆடகர் நாற்கசத் தொலைவிலுள்ள உத்தியில் நின்றுகொண்டு, வட்டத்திற்குள் தத்தம் சில்லியை எறிவர். யாருடையது வட்டத்திற்கு அல்லது வட்டத்தின் நடுவிற்கு மிக நெருங்கி யிருக்கின்றதோ, அவர் முந்தியாடல் வேண்டும். ஏனையோரெல்லாம் தத்தம் அண்மை முறைப்படி முன் பின்னாக ஆடுவர்.

ஆடகரெல்லாரும் தத்தம் கச்சக்காய்களை வட்டத்திற்குள் இட்டபின், ஒவ்வொருவரும் உத்தியில் நின்றுகொண்டு,வட்டத்திற்குள் பரப்பி அல்லது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கச்சக்காய்களைத் தத்தம் சில்லியால் அடித்தல்வேண்டும். வட்டத்திற்கு வெளிச்சென்ற காய்களையெல்லாம் ஆடுவோர் எடுத்துக்கொள்ளலாம்.

சில்லி வட்டத்திற்குள் செல்லாவிடினும்,வட்டத்திற்குள் சென்றும் காய்களை அடித்து வெளியேற்றாவிடினும், காய்களை வெளியேற்றியக்காலும் சில்லியும் உடன் வெளியேறாவிடினும், தவறாம். தவறிவிடின் அடுத்தவர் ஆடல் வேண்டும்; தவறாவிடின் தொடர்ந்து ஆடலாம். இறுதியில், மிகுதியான காய்களை வைத்திருப்பவர் கெலித்தவராவர்.

சேலம் வட்டாரத்தில் கச்சக்காய்க்குப் பதிலாகச் சிறு சுருட்டுப் பெட்டியையும் வைத்து ஆடுவதுண்டு. அது 'சிகரெட் பாகுச்’ சில்லி எனப்படும்.