உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

111

5. குஞ்சு

ஆடுவார் இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, ஒரு கட்சியார் பஞ்சாரம் அல்லது ஆட்டுக் கூண்டளவுள்ள ஒரு வட்டக்கோட்டின் அருகும், இன்னொரு கட்சியார் சற்றுத் தொலைவிலும் நிற்பர். தொலைவில் நிற்பவர், தம்முள் ஒருவரைக் ‘குஞ்சு' என விளம்பி, எதிர்க் கட்சியில் தத்தம் உத்தியைப் பிடிக்கச் செல்வர். எதிர்க் கட்சியார் குஞ்சினைப் பிடிக்க முயல்வர். குஞ்சு கூடுவந்து சேர்ந்துவிடின் (அதாவது பிடிபடாது வட்டக் கோட்டிற்குள் புகுந்துவிடின்), அதே கட்சியார் மீண்டும் குஞ்சுவைத்து ஆடுவர்; பிடிபட்டுவிடின், கூட்டினருகு நின்றவர் குஞ்சுவைத்து ஆடல் வேண்டும்.

.

கோழிக்குஞ்சு பருந்திற்குத் தப்பிக் கூட்டிற்குள் அல்லது வீட்டிற்குள் புகுவதை, இவ் விளையாட்டுக் குறிப்பதுபோலும்!