உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

6. குலைகுலையாய் முந்திரிக்காய்'

பல பிள்ளைகள் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருக்க, ஒரு பிள்ளை திரிபோல் முறுக்கிய துணியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு, “குலைகுலையாய் முந்திரிக்காய்" என்று விட்டு விட்டு உரக்கச் சொல்லி, வட்டத்திற்கு வெளியே பிள்ளை கட்கு அருகில் வலமாகச் சுற்றிச் சுற்றிவரும். அப் பிள்ளை குலை.... காய்” என்று சொல்லுந்தொறும், உட்கார்ந்திருக்கும் பிள்ளைக ளெல்லாம் ஒருங்கே "நரியே, நரியே, ஒடிவா" என்று கத்திச் சொல்வர்.

66

இங்ஙனம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, சுற்றி வரும் பிள்ளை திடுமென்று திரியை ஒரு பிள்ளையின் L பின்னால் வைத்துவிடும்; திரிவைக்கப்பட்ட பிள்ளை உடனே கண்டு அதை எடுக்காவிடின், வைத்தபிள்ளை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, வைக்கப் பட்ட பிள்ளையின் முதுகில் அத்திரியால் ஓரடி ஓங்கிவைத்து எழுப்பி, அதை அப் பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, அப் பிள்ளை யின் இடத்தில் தான் உட்கார்ந்துகொள்ளும். திரி வைத்தவுடன் வைக்கப்பட்ட பிள்ளை கண்டு எடுத்துக்கொண்டு எழுந்துவிடின், வைத்த பிள்ளை விரைந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்து வெற்றிடத்தில் உட்கார்ந்து அடிக்குத் தப்பிக்கொள்ளும்.

L

99

திரியெடுத்த அல்லது திரிவாங்கின பிள்ளை, முன்போல் “குலை... காய்”,என்று முன்சொல்ல, மற்றப் பிள்ளைகளெல்லாம், “நரியே.....வா என்று பின் சொல்வர். பின்பு திரிவைப்பதும் பிறவும் நிகழும்.இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும்.

இவ் விளையாட்டிற்குத் திரித்திரி பந்தம் என்று பெயர்.

பாண்டிநாட்டில்,

பிள்ளைகள் வட்டமாய் உட்காராது

வரிசையாய் உட்கார்ந்து, இவ் விளையாட்டை ஆடுவதுண்டு. அது யானைத்திரி என்று பெயர் பெறும்.