உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

121

(3) இருபொழுதாட்டு

1. நொண்டி

ஆடிடமும் பொழுதும் ஆடுவாரும் : நொண்டி என்பது, பொட்டலிலும் திறந்த வெளிநிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு.

ஆடு கருவி : ஆடுவார் தொகைக்கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒரு பெரு வட்டமே இவ் வாட்டுக் கருவியாம். இவ்வா

ஆடுமுறை : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத் தொகையவான இருகட்சிகளாய்ப் பிரிந்து கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர்.

மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்துகொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற்குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்று

>

சன்று,

காண்டு ஒவ்வொருவராய் ஒவ்வொருமுறை வட்டத்திற்குள் நொண்டியடித்துச் உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொடமுயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப்பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்குமிங்கும் ஓடித்திரிவர். அங்ஙனம் ஓடும்போது கோட்டை மிதிப்பினும், கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப் போயின் கோட்டிற்கு வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலூன்றாக்காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் ல் கோட்டின்மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்) அவருக்கு முந்தின னவராலும் தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப்