உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

தமிழ்நாட்டு விளையாட்டுகள் பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத்தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்த பின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளிநிற்கும் கட்சியாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டுவிடுவதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தொடுவதுமுண்டு; இடையிட்டு ஒரோவொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு; ஒரேயொருவர் ஒரேயொருவரைத் தொடுவது முண்டு; ஒருவரும் ஒருவரையும் தாடாதிருப்பதுமுண்டு. இங்ஙனம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத்தலும், சிலரோ பலரோ வெளியேறியிருத்தலும்,

அனைவரும்

தலும்,

வெளியேறியிருத் அனைவரும் வெளியேறாதிருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும்.

வெளிநிற்கும் கட்சியாரும் அனைவரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஓர் ஆட்டம் முடியும்.

ஆட்ட வெற்றி : உள்நிற்பார் அனைவரும் தொடப்பட்டு விடின் வெளிநிற்பார்க்கும், அங்ஙனமன்றி ஒருவர் எஞ்சியிருப் பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம்.

ஆட்டத் தொடர்ச்சி : ஒருமுறை யாடியபின், மீண்டும் ஒருமுறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ஙனஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள்நிற்பதே இனியதாகக் கருதப்படும்.

ஆட்டுத் தோற்றம் : இவ் விளையாட்டுப் போர்வினை யினின்று தோன்றியதாகும். போர்க்களத்தில் ஒரு கால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான் பட்டு வீழுந்துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம் மற வினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ் விளையாட்டுத் தோன்றிற்று.

குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற் குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று.