உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

123

கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நொண்டி நாடகம் என்னும் நாடக நூல்வகையும் உளது. 'சீதக்காதி நொண்டி நாடகம்' இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர் வினைச் செய்தியின் வேறாம்.

ஆட்டின் பயன் : ஒரு கால் நோய்ப்பட்டும் வெட்டுண்டும் நடக்கவியலாதபோது மறுகாலால் நொண்டியடித்து வேண்டு மிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.

2. நின்றால் பிடித்துக்கொள்

ஏதேனும் ஒரு வகையில் அகப்பட்டுக்கொண்டபிள்ளை பிற பிள்ளைகளை நின்றால் தொடவேண்டும்; உட்கார்ந்து கொண்டால் தொடக்கூடாது. தொடப்பட்ட பிள்ளை, பின்பு பிறரைத் தொடல் வேண்டும்.