உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

3. பருப்புச் சட்டி

பல பிள்ளைகள் “விறகு விறகு” என்று சொல்லிக் கொண்டு, வட்டமாய்ச் சுற்றி வரவேண்டும். ஒரு பெரிய பிள்ளை அவர்களை அப்படியே உட்காரச் சொல்லி, வட்டத்துள் நின்று “உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்று வரிசைப்படி ஒவ்வொருவரையும் கேட்கும். ஒவ்வொருவரும் பருப்பல்லாத ஒவ்வொரு குழம்பைச் சொல்வர். பின்பு, இறுதியில் எல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, அப் பெரிய பிள்ளையை அவ்வாறே கேட்பர். அப் பிள்ளை “பருப்புக்குழம்பு” என்னும். உடனே எல்லாரும் எழுந்திருந்து, அப் பிள்ளையைப் பருப்புச்சட்டி என அழைத்து நகையாடி மகிழ்வர்.

நாள்தோறும் பருப்புக் குழம்பையே விரும்பியுண்ணும் ஒருவரைப் பழிப்பதுபோல் உள்ளது, இவ் விளையாட்டு.