உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

125

4. மோதிரம் வைத்தல்

ஆடுவாரெல்லாரும் இருகட்சியாகப் ருகட்சியாகப் பிரிந்து பிரிந்து கொண்டு, கட்சிக்கொருவராக இருவரொழிய ஏனையரெல்லாம், கட்சி வாரியாய் இரு வரிசையாக எதிரெதிர் உட்கார்ந்து கொள்வர். உட்காராத இருவரும் தத்தம் கட்சி வரிசையின் பின்னால் நின்றுகொண்டிருப்பர். அவருள் ஒருவர் ஒரு மோதிரத்தைக் கையில் வைத்துக்கொண்டு குனிந்து, தம் வரிசையில் ஒவ்வொருவர் பின்னாலும் அதை வைப்பதாக நடித்து, யாரேனும் ஒருவர் பின்னால் வைத்துவிட்டு, வரிசை நெடுகலும் சென்றபின் நிமிர்ந்து நிற்பர். எதிர் வரிசைக்குப் பின்னால் நிற்பவர், மோதிரம் வைக்கப்பட்ட இடத்தை இன்னாருக்குப் பின் என்று சுட்டிக்கூற வேண்டும். சரியாய்ச் சொல்லிவிடின், அடுத்த முறை எதிர் வரிசையாள் மோதிரம் மோதிரம் வைத்தல் வேண்டும்; இல்லாவிடின் முன்வைத்தவரே வைத்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். கீழே யிருப்பவர் ஆட்டு நெடுகலும் உட்கார்ந்து கொண்டே யிருப்பர்.