உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

127

6.

இதென்ன மூட்டை?’

பெரிய

பிள்ளை

""

பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பிறரையெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நிலத்தின்மேற் குப்புற வைக்கச் செய்து, ஒரு மரபுத்தொடர்ச் சொற்களைத் தனித்தனி சொல்லி ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு கையைச் சுட்டி,இறுதிச் சொல்லாற் குறிக்கப்பட்ட பிள்ளையை “உங்கள் அப்பன் பேர் என்ன?" என்று கேட்கும். அதற்கு அப் பிள்ளை “முருங்கைப்பூ என்னும். பின்பு அப் பெரிய பிள்ளை “முருங்கைப்பூ தின்றவனே? (ளே!) முள்ளாந் தண்ணீர் குடித்தவனே! (ளே!)" பாம்புக்கை படக்கென்று எடுத்துக் கொள்" என்று சொல்லும். “முருங்கைப்பூ..... குடித்தவனே! (ளே)" என்னும் பகுதியால், சொல்லுக்கொருவராக நான்கு பிள்ளைகள் சுட்டப்பெறும். "குடித்தவனே! (ளே) முடியும் பிள்ளை, டனே ஒரு கையை எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். குடித்தவனே! (ளே)" என்று இரண்டாம் முறை முடியும் பிள்ளை, இன்னொரு கையையும் எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். இங்ஙனம் திரும்பத் திரும்பச் செய்யின்,இறுதியில் ஒரு பிள்ளை அகப்பட்டுக்கொள்ளும்.

66

என்று

அப் பிள்ளை தன் இருகைகளையும் மடக்கி ஒன்றன்மே லான்றாய்க் கீழேவைக்க, மற்றப் பிள்ளைகளும் தம் கைகளை அவ்வாறே அவற்றின்மேல் அடுக்கி வைப்பர்.

66

பெரிய பிள்ளை "கீழே சாணிபோட்டு மெழுகலாமா? மண்போட்டு மெழுகலாமா?” என்று கேட்டு, பிறர் "சாணிபோட்டு மெழுகு" என்றால்,தன் அகங்கையால் அடிக்கையின் கீழ்ப் பூசுவதுபோல் தடவவேண்டும்; “மண்போட்டு மெழுகு" என்றால், புறங்கையால் அவ்வாறு செய்யவேண்டும்.

பின்பு மீண்டும், “தீட்டின கத்தியில் வெட்டலாமா? தீட்டாத கத்தியில் வெட்டலாமா?” என்று பெரிய பிள்ளை கேட்டு, “தீட்டின கத்தியில்” என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்