உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

டாலும், “தீட்டாத கத்தியில்” என்றால் மணிக்கைப் பக்கத்தாலும் வெட்டவேண்டும்.

66

இனி,வெட்டுஞ் செயல்பற்றி, முற்கூறிய வினாவிற்குப் பதிலாக, அடியில் வெட்டட்டுமா? நுனியில் வெட்டட்டுமா?” என்று கேட்டு, 'அடியில் வெட்டு என்றால் குத்துக்கையடுக்கின் அடியிலும், “நுனியில் வெட்டு என்றால் அதன் நுனியிலும் வெட்டுவதுமுண்டு.

66

66

பின் மீண்டும் முன்முறைப்படி கைகளை அடுக்கி வைக்கவேண்டும். பெரிய பிள்ளை ஒவ்வொரு கையாய்த் தொட்டு இதென்ன மூட்டை 'இதென்ன மூட்டை?” என்று கேட்கும். பிறர் "அரிசி மூட்டை”, “பருப்பு மூட்டை,” “புளி மூட்டை”, “உப்பு மூட்டை

66

என

"" 66

وو

ஒவ்வொரு சரக்கின் பெயராற் கூறுவர். "ஒவ்வொரு மூட்டையிலும் கொஞ்சங் கொஞ்சந்தாருங்கள்” என்று பெரிய பிள்ளை கேட்கும். பிறர் "தரமாட்டோம்" என்பர். அதனாற் பெரிய பிள்ளை, எல்லாரையும் கண்ணை மூடிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்துகொள்ளச் சொல்வாள். அவர் அங்ஙனஞ் செய்தபின், "உங்கள் அப்பா வருகிறார்கள், “உங்கள் அம்மா வருகிறார்கள்" என்று ஏமாற்றி யாரையேனும் எழவைத்து, அப் பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையான அடி பெரியபிள்ளை கொடுக்கும். ஒரு வரும் ஏமாறி எழாவிடின், "விளையாட்டுப் போதும், எழுந்திருங்கள் என்று சொல்லி, எல்லாரும் எழுந்தபின் எல்லார்க்கும் அடிகொடுக்கும். இதோடு ஆட்டம் முடியும்.