உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

129

7. கும்மி

பல பேதையரும்' பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து, கும்மி எனப்படும். வடார்க் காட்டு வட்டாரத்தார் இதைக் கொப்பி என்பர்.

கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது கும்மியெனப்பட்டது.

கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு. அது 'கும்மியடி' என்று தொடங்குவதோடு, அத் தொடரையே ஒவ்வோர் ருவிலும்(சரணத்திலும்) மகுடமாகவுங் கொண் டிருக்கும்.

எடுத்துக்காட்டு

கும்மியடி பெண்ணே கும்மியடி நல்ல

கொன்றை மலர்சூடிக் கும்மியடி

நம்மையா ளும்தனி நாயகம் நம்மிடம்

நண்ணிய தென்றுநீ கும்மியடி

ஆட்சிமொழி யிங்கே ஆங்கிலமாய்

ஆகி விடின்அது கேடாகும்

மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை

மாதர சேவரக் கும்மியடி.

என்றும்

இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுகளும் கும்மிக்கும் பாடப்படுகின்றன. ஒற்றை= ஏகம். அடி = ஆதி.

1.

ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதையெனப்படுவாள்.