உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

.

3. குரவை

137

137

எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட் டாகத்

தெரிகின்றது.

2. அறியப்படாதவை

சாழல், தெள்ளேணம் முதலியன.

பந்து புளியங்கொட்டை முதலியன கொண்டு விளையாடும் ஓர் டு, 'அச்சுப்பூட்டி விளையாடுதல்' என்னும் பெயரால், ராட்டிலர் (Rottler) அகராதியிற் குறிக்கப்பெற்றுளது.

II.

பள்ளிக்கூட

கோழிக்குஞ்சு -1

விளையாட்டுகள்

பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன்னொருவர் சேர்ந்து கட்டிக்கொண்டு அல்லது பற்றிக் கொண்டு, வரிசையாக நிற்பர். தலைமையான பிள்ளை முதலில் நிற்கும். அப் பிள்ளைக்கு எதிரே மற்றொரு பிள்ளை நிற்கும்.

தலைமையான பிள்ளை கோழியையும், பின்னால் நிற்கும் பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், எதிரே நிற்கும் பிள்ளை கழுகையும், நிகர்ப்பர். கழுகு கடைசிக் குஞ்சைப் பிடிக்க வரும். வரிசை வளைந்து குஞ்சுகள் தப்பும்.

கழுகு கோழியை நோக்கி “எனக்கொரு குஞ்சு தா; இன்றேல் பறந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவேன்” என்னும். கோழி மறுத்து, கழுகு குஞ்சைப் பிடிக்காதபடி மறிக்கும். கழுகு சுற்றிச் சுற்றி வந்து கடைசிக் குஞ்சைப் பிடித்துக்கொண்டு போகும். இங்ஙனமே, பின்பு ஏனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாய்ப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

கோழி மிக மிக வருந்தும்.