உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

கோழிக்குஞ்சு 2

-

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

எட்டுப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வர். அவருள் ஒரு பிள்ளை கோ ழியையும், ஐந்து பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், மற்றொரு பிள்ளை கழுகையும், மற்றுமொரு பிள்ளை நரியையும் நிகர்ப்பர்.

வளியே

கோழி தன் குஞ்சுகளைக் கூண்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, இரைதேட வெளியே சென்றுவிடும். குஞ்சுகள் தாய் பேச்சைத் தட்டிக் கூண்டிற்கு 6 வரும். கழுகு ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டுபோகும். ஏனைக் குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டு போகும். இங்ஙனம் நாலு குஞ்சு போனபின் தாய் திரும்பிவரும். எஞ்சியுள்ள குஞ்சு நடந்ததைச் சொல்லும்.

கோழி கழுகிடம் சென்று, “என் குஞ்சுகளையெல்லாங் காடுத்துவிடு. அவற்றிற்குப் பதிலாக நான் உனக்கு நாளைக்குக் கறிதருவேன்” என்று வாக்களித்து, குஞ்சுகளை மீட்டுக்கொண்டு போகும்.

66

'நீ

மறுநாள், கழுகிற்குக் கறி எங்ஙனம் கொடுப்பதென்று கோழி கவன்றுகொண்டிருக்கும்போது, நரி அதனிடம் வந்து, கவலைப்படாதே. கழுகிற்குக் கறிகொடுக்க வேண்டியதில்லை. அதனின்று தப்புவதற்கு உனக்கொரு வலக்கராம் (தந்திரம்) சொல்லிக்கொடுப்பேன்," என்று சொல்லும். கோழி அதை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பின்பு நரி கழுகிடம் சென்று, “கோழி னக்கு வாக்களித்தபடி கறி கொடுக்காதாம். நீ போய் அதன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான் உனக்குக் கறி கிடைக்கும்” என்று மூட்டிவிடும். கழுகு உடனே போய், எல்லாக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாகப் பிடித்துக்கெண்டு வந்துவிடும். நரிக்கு ஒரு குஞ்சு பங்கு கிடைக்கும்.

கோழி நரியை நம்பிக் கெட்டுப்போனதை நினைத்து மிகத்

துயருறும்.