உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

139

குறிப்பு : மேற்கூறிய விளையாட்டிரண்டும் பேதைப்பருவப் பெண்களுக்குரியவை. ஐயாட்டைப் பருவத்தாராயின் ஆண்

பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளலாம்.

III. பண்டை

(1) புனல் விளையாட்டு

விளையாட்டு விழாக்கள்

பண்டைக் காலத்தில், ஆற்றருகே யிருந்த நகரமாந்த ரெல்லாரும், ஆண்டுதோறும் ஆற்றிற் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று, ஒரு பகலிற் பெரும்பகுதி அவ் வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா, புனல் விளையாட்டு அல்லது புனலாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும்வழங்கிற்று.

நீராடுவாரெல்லாம், ஆற்றிலிடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கைக் கருவிகளையும், புணை தெப்பம் பரிசல் முதலிய மிதவைக் கருவிகளையும், காதலர்மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளித்தற்குத் துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியபின் வேண்டும் ஊண் உ டை அகில் முதலியவற்றையும், தத்தமக்கு இயன்றவாறு, யானை குதிரை தேர் முதலியவற்றில் ஊர்ந்தும் கால்நடையாய் நடந்தும், கொண்டு செல்வர். குடிவாரியாக ஆங்காங்கு அமைக்கப்பெற்ற குற்றில்களும் புதுக்கடைகளும், சேர்ந்து, ஒரு விழவூர் போலக் காட்சியளிக்கும்.

நீந்தவல்லார் சற்று ஆழத்திலும் அல்லாதார் கரையை யடுத்தும் நீராடுவதும், பூசுஞ்சுண்ணம் சாந்து குழம்பு முதலியனவற்றின் ஏற்றத்தாழ்வுபற்றிப் பெண்டிர் இகலாடுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரொடு கூடிப் புனலாடினாரென்று மனைக்கிழத் தியர் ஊடுவதும், பூசுசாந்தம் புனைந்தமாலை உழக்கும் நீராட்டு முதலியவற்றாற் கலங்கல் வெள்ளம் புதுமணம் பெறுவதும், புனலாட்டு நிகழ்ச்சிகளாம்.

நீராடியவர் மாலைக்காலத்தில் மகிழ்ந்தும் அயர்ந்தும் மனை

திரும்புவர்.