உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்த தெனப் பெருங்கதை கூறும்.

இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும்.

(2) பொழில் விளையாட்டு

நகரவாணர், இளவேனிற் காலத்தில், காலத்தில், ஊருக்குச் ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப் போன்றதாகும்.

ஈடு

சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் FF (h பட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வேறிடஞ்சென்று று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர, இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர்.

சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன் னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர்.

நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும்.

புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம்.