உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

(i) சதுரப் பேந்தா

1. பேந்தா

ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் ம் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டுப் பேந்தா எனப் படும்.இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்புநோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது டுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.

ராப்பள்ளி

ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள்சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித் தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தி யெனப்படும்.

ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.

மேல்

ஆடுமுறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்க் கோலியைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் ன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.

ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்று

கொண்டு தன் கோலியைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற்

கிடைக்குள்ளேனும் ே பாய் நிற்பின் தவறாம். அதன்பின்

அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று